சம கால தமிழ் சினிமாவில் மிக முக்கியமான தயாரிப்பாளர்களில் ஒருவர் ஐசரி கணேஷ் அவர்கள். பட தயாரிப்பு மட்டுமல்லாமல் இந்தியாவில் கவனிக்க தக்க தொழிலதிபராகவும் தற்போது வலம் வருகிறார். இவர் பிரபல நகைச்சுவை நடிகர் ஐசரி வேலன் அவரின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல்ஸ் தயாரிப்பு நிருவனம் மூலம் தமிழ் சினிமாவில் மிக முக்கியமான படங்களான கோமாளி, என்னை நோக்கி பாயும் தோட்டா, மூக்குத்தி அம்மன், எல் கே ஜி, வெந்து தணிந்தது காடு ஆகிய படங்களை தயாரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இவர் ஆர் ஜே பாலாஜி நடிக்கும் சிங்கபூர் சலூன், ஹிப் ஹாப் ஆதி நடிக்கு பிடி சார் ஆகிய படங்களை தயாரித்து வருகிறார். மேலும் திரைப்பட விநியோகம் மற்றும் திரைப்பட உரிமை விற்பனை ஆகியவற்றையும் செய்து வருகிறது.

இந்நிலையில்,வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் புதிய முயற்சியாக பொது பங்கு வெளியீடு (ஐபிஒ -இனிஷியல் பப்ளிக் ஆஃபரிங்) மூலம் மக்களுக்கு பங்குகளை வழங்க முடிவு செய்துள்ளது. முதல் முறையாக வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் பொதுமக்களிடமிருந்து ஐபிஓ மூலம் ரூ.34 கோடி நிதி திரட்டுகிறது. இந்த நிதி திரைப்பட தயாரிப்பிற்காக பயன்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளது. மேலும் தேசிய பங்கு சந்தையில் SME தளத்தின் மூலம் இந்நிறுவனம் பட்டியலிடப்பட்டுள்ளது. ஒரு பங்கின் விலை ரூ 99 என்றும் அதன் வெளியீட்டு அளவு ரூ34,08,000 என்றும் தெரிவித்துள்ளது. இந்த ஐபிஓ செயல்பாடு கடந்த மார்ச் 10 ம் தேதி தொடங்கப்பட்டது. நான்கு நாள் கணக்கின் படி வரும் மார்ச் 14ம் தேதி இந்த ஐபிஓ செயல்பாடு நிறைவடையவுள்ளது.

ஐபிஓ : ஒரு நிறுவனம் பொதுமக்களுக்கு பங்குகளை முதல்முறையாக வெளியிடும் செயல்முறை ஐபிஒ ஆகும். நிறுவனத்தின் செயல்பாடுகளை விரிவுபடுத்த, புதிய தயாரிப்புகளை உருவாக்க அல்லது நிறுவனத்தின் ஏற்கனவே இருந்த கடன்களை அடைக்க இந்த செயல்பாடு சிறந்த வழியாக செயல்படுகிறது. இன்னும் விளக்கமாக அதுவரை தனியாருக்கு சொந்தமாக இருந்த நிறுவனம் பொது வர்த்தகம் செய்யப்படும் நிறுவனமாக மாறுகிறது. இதுபோன்ற செயல்பாடுகள் செய்வதனால் இந்த பொது பங்கில் முதலீடு செய்யும் சிறு முதலீட்டாளர்களுக்கு குறைந்த விலையில் பங்குகள் கிடைப்பதுடன், ஏற்கனவே குறிப்பிட்ட நாளில் கணிசமான லாபமும் ஈட்டிவிட முடிகிறது. இதனாலே முதலீட்டாளர்கள் ஐ.பி.ஒ க்களை அதிகம் நாடுகின்றனர்.

இது மட்டுமல்லாமல் வேல்ஸ் பிலிம்ஸ் ன் துணை நிறுவனமான வேல்ஸ் ஸ்டுடியோ தர்போது பெங்களூரில் ஜாலிவுட் என்ற பெயரில் ஒரு பொழுதுபோக்கு பூங்காவை உருவாக்கி வருகிறது.

இந்த ஜாலிவுட் பொழுதுபோக்கு பூங்காவில் ஒரே இடத்தில் திரைப்பட ஸ்டுடியோ, கேளிக்கை பூங்கா, செயற்கை நீரூற்று பூங்கா, சாகச விளையாட்டுகள் போன்ற பொழுதுபோக்கு அம்சங்கள் மற்றும் பல கொண்டாட்ட நிகழ்வுகளுடன் அமையவிருக்கிறது.ஓய்வுநேரத்தில் எல்லா வயதினருக்கும் சிறந்த அனுபவத்தை கொடுப்பதற்ககாக மிக பிரமாண்ட அளவில் உருவாக்கப்பட்டு வருகிறது வரும் ஆண்டின் இறுதிக்குள் திறக்கப்படும் என்று தகவல் வெளியாகிவுள்ளது குறிப்பிடத்தக்கது.