கடந்த சில தினங்களாக சோசியல் மீடியாவில் இயக்குனர் வெங்கட் பிரபுவின் தளபதி 68 திரைப்படம் தான் தளபதி விஜயின் கடைசி திரைப்படமாக இருக்கும் என பரவி வரும் வதந்திகளுக்கு தயாரிப்பாளர் தனஞ்செயன் அவர்கள் பதிலளித்துள்ளார். தற்சமயம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பக்கா அதிரடி ஆக்சன் திரைப்படமாக உருவாகும் லியோ திரைப்படத்தில் தளபதி விஜய் நடித்து வருகிறார். வருகிற அக்டோபர் 19ஆம் தேதி ஆயுத பூஜை வெளியிடாக லியோ திரைப்படம் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது. அடுத்ததாக ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் தயாரிப்பில் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் தளபதி 68 படத்தில் விஜய் நடிக்க இருக்கிறார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசை அமைக்க உள்ளார். சமீபத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் சாதித்த மாணவ மாணவியர்களுக்கு தளபதி விஜய் நேரில் ஊக்கத்தொகை வழங்கியது அவரது அரசியல் சார்ந்து பரபரப்பாக பேசப்பட்டது. எனவே அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கும் தளபதி 68 திரைப்படம் தான் தளபதி விஜயின் கடைசி படம் என செய்திகள் பரவத் தொடங்கின.

இந்த நிலையில் நமது கலாட்டா தமிழ் சேனலுக்கு பிரத்யேக பேட்டி அளித்த தயாரிப்பாளர் திரு.தனஞ்செயன் அவர்கள் நம்மோடு பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். அந்த வகையில், “தளபதி 68 திரைப்படம் பற்றிய இன்னொரு கருத்து என்னவென்றால் அந்தத் திரைப்படம் தான் தளபதி விஜயின் கடைசி படம் என ஒரு கருத்து பரவுகிறது. ஒரு அழுத்தமான அரசியல் பேசக்கூடிய படமாக இருக்கும் என்ற ஒரு கருத்தும் இருக்கிறது. இதை எப்படி பார்க்கிறீர்கள்?” என கேட்டபோது,

“அரசியல் தளத்தில் என நான் சொல்ல மாட்டேன் அரசியல் தீம் கொண்ட படமாக இருக்கலாம். இப்போது நீங்கள் ஒரு உதாரணத்திற்கு தனி ஒருவன் படத்தை எடுத்துக் கொள்வோம். ஒரு அரசியல்வாதியும் ஒரு கிரிமினலும் சேர்ந்து ஒன்றாக ஒன்று செய்கிறார்கள். ஒரு ஐபிஎஸ் அதிகாரி அதை கண்டுபிடிக்கிறார். அதில் மொத்தமாக அரசியல் பற்றி தான் பேசுகிறார்கள். எப்படி அரசியலில் ஏமாற்றுகிறார்கள் தொண்டர்களை எப்படி ஏமாற்றுகிறார்கள். எல்லாமே காட்டுவார்கள்.. அரசியல் படம் என்றா சொல்கிறீர்கள் அது ஒரு மாஸ் கமர்சியல் படம். அதனால் தான் அந்த படம் அத்தனை மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. இப்போது வரையிலும் ஒரு பென்ச் மார்க் படமாக இருக்கிறது. அது ஒரு தனி ஒருவன் படம் மாதிரியான கதையாக இருக்கலாமே... ஏன் அதை ஒரு அரசியல் சார்ந்த படம் என்று நினைக்கிறோம். தனி ஒருவன் ஒரு அரசியல் படம் என்றால் அப்படித்தான் தளபதி 68ம் இருக்கும் என நாம் சொல்லலாம். தளபதி 68 படம் தான் அவரது கடைசி படமா என்பதற்கு விஜய் தரப்பிலிருந்தே விளக்கம் அளிக்கப்பட்டு இருக்கிறது இல்லை என்று.. இல்லை அவர் எந்த இடைவெளியும் எடுக்கவில்லை என புஸ்ஸி ஆனந்த் அவர்களே தெரிவித்திருக்கிறார்.” என்று தயாரிப்பாளர் தனஜெயன் அவர்கள் பேசியிருக்கிறார் தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் அவர்களின் அந்த முழு பேட்டியை கீழே உள்ள லிங்கில் காணலாம்.