தமிழ் சினிமாவின் குறிப்பிடப்படும் கதாநாயகிகளில் ஒருவரான நடிகை பிரியா பவானி சங்கர் பொம்மை படத்தின் இயக்குனர் ராதா மோகன் உட்பட வேறு எந்தெந்த இயக்குனர்களிடம் கதையை கேட்காமல் பணியாற்றுவேன் என்பது குறித்து பேசி இருக்கிறார். மான்ஸ்டர் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு மீண்டும் எஸ்.ஜே.சூர்யா உடன் இணைந்து இயக்குனர் ராதா மோகன் இயக்கத்தில் நடிகை பிரியா பவானி சங்கர் நடித்திருக்கும் பொம்மை திரைப்படம் நாளை மறுநாள் ஜூன் 16ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. இந்த நிலையில் நமது கலாட்டா தமிழ் சேனலுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் பேசிய பிரியா பவானி சங்கர் அவர்களிடம், மெக்சிகோவில் ஒரு கதை கேள்விப்பட்டோம் “லா பாஸ்கலிட்டா” என்று ஒரு மேனெக்வின் பொம்மை... ஒரு 90 வருடங்களுக்கு முன்பு நடந்த ஒரு கதை... அவருக்கு அன்று கல்யாணமாம் ஆனால் ஒரு சிறிய சிலந்தி கடித்து அவர் இறந்து விட்டார். ஆனால் அவரை அடக்கம் செய்யாமல் உண்மையிலேயே ஒரு பொம்மை போல் செய்து வைத்தார்களாம். சில பேர் நிறைய கதைகள் சொல்வார்களாம் அந்த பொம்மை சில நேரங்களில் நகரும் திரும்பிப் பார்க்கும் என்றெல்லாம், நிறைய கதைகள் சொல்வார்களாம். எனவே இந்த பொம்மை கதை பார்த்த பிறகு இது மாதிரி நிறைய கதைகள் பார்க்க முடிந்தது... அப்படி உங்களுக்கு இந்த பொம்மை படம் பார்க்கும்போது உங்களுக்கான இந்த கதைகள் நடந்தது எப்படி இருந்தது? முழுவதும் கற்பனையிலேயே ஒரு கதை நடக்கிறது அதில் நீங்கள் ஒரு கதாபாத்திரம் ஏற்று நடித்திருக்கிறீர்கள் அது எப்படி இருந்தது? என கேட்டபோது,

“ராதா மோகன் சாருக்கு தான் எல்லா க்ரெடிட்களும் அவருடைய எண்ணங்களை திரையில் என்னவாக காட்ட நினைத்தாரோ அதை மொத்தமாக செய்திருக்கிறார். அவர் ஒரு வார்த்தையில் சொல்லி எதுவும் வாங்கவில்லை. அவருக்கு என்ன தேவை என்பதை ஒரு பிரசன்டேஷன் மாதிரி எங்களிடம் கொடுத்து விட்டார். நீங்கள் சொல்லும் அளவிற்கு ரொம்ப கடினமானதாக இல்லை. அவர் மிகவும் எளிமையாக்கி விட்டார். நான் மான்ஸ்டர் இயக்குனரை சொல்வேன் அவருடைய படம் என்றால் நான் கதையை கேட்காமல் கண்ணை முடிக்கொண்டு நடிக்கிறேன் என சொல்லி விடுவேன். அந்த மாதிரி அவர்களுடைய படைப்புகள் பேசும். அது மாதிரி தான் ராதா மோகன் சாரிடமும் நான் கதையைக் கேட்க வேண்டும் என்று நினைக்கவே இல்லை. அவர் படங்களில் சிறிய கதாபாத்திரங்கள் கூட நமது மனதில் நிற்கும். நீங்கள் பெரிய கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்பது கூட இல்லை கொஞ்ச நேரம் வந்து சென்றாலும் அந்த கதாபாத்திரம் நிற்கும். அந்த மாதிரி நல்ல எழுத்தாளர்கள் இயக்குனர் வெற்றிமாறன் சார் மாதிரியான… அதெல்லாம் கதையைக் கேட்க வேண்டும் என்று அவசியம் கிடையாது. நீங்கள் அவரை நம்புகிறீர்கள். அவர்கள் இதுவரை சாதித்த படைப்புகளை நம்புகிறீர்கள்” என தெரிவித்துள்ளார். இன்னும் பல சுவாரசிய தகவல்களை பகிர்ந்து கொண்ட நடிகை பிரியா பவானி சங்கரின் அந்த முழு பேட்டியை கீழே உள்ள லிங்கில் காணலாம்.