வித்தியாசமான கதைகள் எதார்த்தமான மனிதர்கள். பசுமை கொஞ்சும் ஒளிப்பதிவு காட்சிகள், போற போக்கில் உதிர்த்து போகும் நய்யாண்டி என்று படத்திற்கு படம் வித்யாசத்தை கொடுத்து வரும் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன். தமிழில் ‘நேரம்’ படம் மூலமாக அறிமுகமானார். படம் பெரிதும் மக்களை கவரவில்லை என்றாலும் கவனிக்க தக்க இளம் இயக்குனர் பட்டியலில் அல்போன்ஸ் இருந்து வந்தார். அதன் பின் மலையாளத்தில் நிவின் பாலி, சாய்பல்லவி, மடோனா செபஸ்டின், அனுபமா பரமேஸ்வர் உள்ளிட்ட நட்சத்திரங்களுடன் இளமை ததும்பும் கல்லூரி கதையுடன் கதாநயகனின் காதல் வாழ்கையையும் அடிப்படையாக கொண்டு உருவான படம் பிரேமம். இது ரசிகர்களால் வெகுவாக கவரப்பட்டது. மலையாளத்தில் மட்டுமல்லாமல் தென்னிந்தியா முழுவதும் இந்த படத்தை கொண்டாடி வந்தனர். குறிப்பாக தமிழ் ரசிகர்கள். தமிழ் மக்கள் மலையாள சினிமாவை பார்க்க தொடங்கியதில் பிரமேம் படம் ஆரம்ப புள்ளியாக இருந்தது.

அதன் பின் பிரேமம் படம் தெலுங்கு மொழியில் ரிமேக் செய்யப்பட்டது. மலையாளத்தை விட அங்கு சுமாராக தான் வரவேற்கப்பட்டது தமிழ் ரசிகர்களிடம் பிரேமம் படமே வெற்றியடைந்ததால் அந்த படத்தை ரீமேக் செய்யும் திட்டத்தை கை விட்டது தமிழ் சினிமா. அதன்பின் அல்போன்ஸ் ன் அடுத்த படம் என்னவாக இருக்கும் என்பதை தமிழ் சினிமாவும் மலையாள சினிமாவும் கவனித்து வந்தது. அதன் பின் தமிழில் கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் ஒரு ஆந்தாலஜியை இறக்கினார் அல்போன்ஸ்.

ஆனால் எதிர்பார்த்தளவு வரவேற்பு கிடைக்கவில்லை. சொல்ல போனால் படம் வந்ததா என கேட்குமளவு படம் இருந்தது. ஆந்தாலாஜி தமிழ் மக்களுக்கு புதிது என்பதால் கைகொடுக்காமல் இருந்திருக்கும் என்று விமர்சனமும் எழுந்தது. இருந்து அல்போன்ஸ் இன்றும் பிரேமம் பட இயக்குனர் என்று அறியப்படுகிறார். அந்தளவு பிரேமம் படம் தென்னிந்தியாவை ஈர்த்துள்ளது எனலாம்.அதன் பின் நீண்ட இடைவெளிக்கு பின் உருவான படம் தான் ‘கோல்ட் பிரித்வி ராஜ், நயன்தாரா நடிப்பில் மலையாளத்தில் உருவான இந்த படம் சமீபத்தில் வெளியாகி கலவையான விமரசனத்தையே பெற்று வருகிறது. ஒரு தமிழ் படம் ஒரு மலையாள படம் என்று வரிசை படுத்தி இயங்கி வரும் அல்போன்ஸ் அடுத்த படம் தமிழில் இருக்கும் என்பது பலருடைய எண்ணமாகும். அதன் படி தமிழில் அடுத்து அவர் யாருடன் இணைய போகிறார் என்ற பேச்சு சமீபத்தில் நிலவி வருகிறது.

இந்நிலையில் உலகநாயகன் கமல் ஹாசனை சந்தித்து பேசியுள்ளார் என்று தனது சமூக வலைதளத்தில் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளர். அதில், “என் வாழ்க்கையில் முதல்முறையாக சினிமா எவரெஸ்ட் சிகரத்தை சந்தித்தேன். அவர் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினார். அவர் வாயிலிருந்து கிட்டத்தட்ட 5 முதல் 6 கருக்கதைகள் கேட்டேன்..எனது எழுதும் நோட்டில் 10 நிமிட இடைவெளியில் சிறு சிறு குறிப்புகளை எடுத்தேன். அவரைப் பொறுத்தவரையில் ஒரு மாஸ்டராக அவர் பகிர்ந்துகொண்டவை அனுபவங்கள் தான்... ஆனால் ஒரு மாணவனாக அவர் சொன்ன எந்த விஷயத்தையாவது நான் தவறவிட்டுவிடுவேனோ என்று பயந்தேன். இந்த சந்திப்பை கொடுத்த பிரபஞ்சத்திற்கு நன்றி!” என்று குறிப்பிட்டிருந்தார்.

பொதுவாகவே கமல் ஹாசனுக்கு தமிழில் எந்தளவு ரசிகர்கள் இருக்கிறார்களோ அதே அளவு ரசிகர்கள் மலையாளத்திலும் இருக்கின்றனர். அந்த வகையில் கடந்த ஆண்டு அவரது ‘விக்ரம் படத்தின் பிரம்மாண்ட வெற்றியினால் அவரது பிரபல அந்தஸ்தை இன்னும் சம கால இளைஞர் மத்தியில் நீட்டினார். மேலும் அல்போன்ஸ் ஆரம்பத்திலிருந்தே கமல் ஹாசன் ரசிகர். அவருடைய எல்லா படங்களிலும் ஏதோ ஒரு இடத்தில் அவரது பெயரையோ அவரது பாடல் அல்லது படங்களையோ குறிப்பிடுவார்.

அதன்படி அவரது தீவிர ரசிகன் என்ற அடிப்படியில் இந்த சந்திப்பு அவரது வாழ்நாளில் மறக்கமுடியாத அனுபவத்தை கொடுத்திருக்கும். மேலும் இளம் இயக்குனருடன் தொடர்ந்து கதை கேட்டு வரும் கமல் ஹாசன் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் நடித்தாலும் ஆச்சர்யம் இல்லை. மேலும் இந்த பதிவு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி தற்போது வைரலாகி வருகிறது