விஜய் டிவியில் ஒளிபரப்பாகி பெரிய ஹிட் அடித்த தொடர் ஈரமான ரோஜாவே.பவித்ரா ஜனனி,திரவியம் உள்ளிட்டோர் முன்னணி வேடங்களில் நடித்த இந்த தொடர் 800 எபிசோடுகளை கடந்து பெரிய வெற்றி தொடராக உருவெடுத்தது.இதன் இரண்டாம் பாகம் சில மாதங்களுக்கு முன் விஜய் டிவியில் ஒளிபரப்பை தொடங்கியது.

2022 ஜனவரி 17 முதல் இந்த தொடர் ஒளிபரப்பை தொடங்கி வெற்றிகரமாக சென்று வருகிறது.ஈரமான ரோஜாவே 2-வில் ஹீரோவாக சித்தார்த்,திரவியம் ஹீரோவாக நடித்து வருகின்றனர்.ஸ்வாதி கொண்டே,கேப்ரியெல்லா கார்ல்டன் ஹீரோயின்களாக நடித்து வருகின்றனர்.

இவர்களுடன் தீபக் குமார்,ஷ்ராவந்திகா,மனோகர்,ப்ரீத்தி குமார்,சாந்தினி பிரகாஷ்,சுனிதா என பல நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.விறுவிறுப்பான கதைக்களத்துடன் இந்த தொடர் பரபரப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த தொடரில் முக்கிய வேடத்தில் நடித்து வந்த ப்ரீத்தி குமார் சில தவிர்க்கமுடியாத காரணங்களால் விலகுவதாக அறிவித்துள்ளார்.விரைவில் விஜய் டிவியில் ஒரு புதிய தொடரில் சந்திக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.இவர் திடீரென்று விலகியது ரசிகர்களிடம் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

View this post on Instagram

A post shared by Preethi Kumar (@preethikumar_official)