தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த நடிகர் பிரசாந்த் கதாநாயகனாக நடித்து கடைசியாக வெளிவந்த திரைப்படங்கள் எதிர்பார்த்த அளவுக்கு மிகப்பெரிய பெற தவறின. இதனையடுத்து மீண்டும் தமிழ் திரை உலகில் தனது அடுத்த பிளாக்பஸ்டர் ஹிட் கொடுக்கும் வகையில் பிரஷாந்த் நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் அந்தகன்.

பாலிவுட்டில் சூப்பர் ஹிட்டான அந்தாதூன் திரைப்படத்தின் தமிழ் ரீமேக்காக தயாராகிவருகிறது அந்தகன் திரைப்படத்தில் பிரசாந்த் உடன் இணைந்து சிம்ரன், சமுத்திரக்கனி, கே.எஸ்.ரவிக்குமார், நவரச நாயகன் கார்த்திக், ஊர்வசி, ப்ரியாஆனந்த், யோகி பாபு, மனோபாலா, மற்றும் வனிதா விஜயகுமார் உள்ளிட்டோர் இணைந்து நடித்துள்ளனர்.

இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மை கொண்ட தியாகராஜன் அவர்கள் அந்தகன் திரைப்படத்தை தயாரித்து இயக்கியுள்ளார். ரவி யாதவ் ஒளிப்பதிவு செய்துள்ள அந்தகன் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். சில வாரங்களுக்கு முன்பு அந்தகன் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்ற நிலையில் தற்போது இறுதிகட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

முன்னணி தயாரிப்பாளரான கலைப்புலி.எஸ்.தாணு அவர்கள் தனது V கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் வெளியிட விரைவில் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ள அந்தகன் திரைப்படத்தின் முதல் பாடலாக என் காதல் பாடல் வெளியாகி நல்ல வரவேற்ப்பை பெற்ற நிலையில், தற்போது அந்தகன் திரைப்படத்திலிருந்து 2-வது பாடலாக யோசிச்சி யோசிச்சி பாடல் வருகிற மே 26ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Make way for the second single #YosichiYosichi from #Andhagan coming this MAY 2️⃣6️⃣th! 😍🥳@Music_Santhosh @actorprashanth @actorthiagaraja @theVcreations @SimranbaggaOffc @PriyaAnand @HaricharanMusic @Lyricist_Vivek pic.twitter.com/UY4Ctwwtc3

— Sony Music South (@SonyMusicSouth) May 24, 2022