நடிகர் ஜெயம்ரவி நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான கோமாளி திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன். கோமாளி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று சூப்பர் ஹிட்டானதை தொடர்ந்து அடுத்ததாக லவ் டுடே திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
கதாநாயகனாக களமிறங்கியுள்ள இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கிய நடித்துள்ள லவ் டுடே திரைப்படத்தை தனது 22வது திரைப்படமாக ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. பிரதீப் ரங்கநாதன் உடன் இணைந்து இவானா கதாநாயகியாக நடிக்க, சத்யராஜ், ராதிகா, யோகி பாபு, ரவீனா மற்றும் ஆதித்யா கதிர் ஆகியோர் லவ் டுடே திரைப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
தினேஷ்குமார் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்யும் லவ் டுடே படத்திற்கு பிரதீப்.E. ராகவ் படத்தொகுப்பு செய்ய, யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். முன்னதாக லவ் டுடே திரைப்படத்தில் இருந்து முதல் பாடலாக யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து பாடி வெளிவந்த சாச்சிட்டாளே மற்றும் 2வது பாடலாக சிட் ஸ்ரீராம் பாடியுள்ள என்னை விட்டு ஆகிய பாடல்கள் வெளிவந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தன.
லவ் டுடே திரைப்படத்தின் இறுதிகட்ட பணிகள் சமீபத்தில் தொடங்கப்பட்டு முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், தற்போது லவ் டுடே திரைப்படத்தின் டப்பிங் பணிகள் அனைத்தும் நிறைவடைந்துள்ளதாக இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் டப்பிங் தியேட்டரில் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.