பாகுபலி படத்தின் மூலம் உலகம் முழுவதும் ரசிகர்களை பெற்ற நடிகர் பிரபாஸ்.இந்த படம் இரண்டு பாகங்களாக வெளியாகி பெரிய வரவேற்பை பெற்று வசூல் வேட்டை நடத்தியது.இதனை அடுத்து வெளியான சாஹோ,ராதே ஷியாம் படங்கள் சுமாரான வரவேற்பை பெற்றன.இவற்றை அடுத்து சலார்,ப்ராஜெக்ட் கே,ஆதிபுருஷ் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார் பிரபாஸ்.

சலார் படத்தினை கே.ஜி.எப் இயக்குனர் பிரஷாந்த் நீல் இயக்குகிறார்.homable films இந்த படத்தை தயாரிக்கின்றனர்.இந்த படமும் இந்தியா முழுவதும் உள்ள முக்கிய மொழிகளில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.கேஜி எப் இயக்குனருடன் பிரபாஸ் இணைவதால் இந்த படத்திற்கு அதீத எதிர்பார்ப்பு உள்ளது.

இந்த படத்தில் ஸ்ருதிஹாசன் ஹீரோயினாக நடிக்கிறார்,ஜெகபதி பாபு வில்லனாக நடித்துள்ளார்.மலையாள நடிகர் பிரித்விராஜ் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார் என்ற தகவல் கிடைத்துள்ளது.இந்த படத்தின் படப்பிடிப்பு பல கட்டங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.இந்த படம் செப்டம்பர் 28ஆம் தேதி 2023-ல் வெளியாகும் என்று அறிவித்துள்ளனர்.ஒரு புது போஸ்டருடன் வெளியாகியுள்ள இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் இன்னும் எதிர்பார்ப்பை ஏற்றியுள்ளது.படத்தின் அடுத்தகட்ட அப்டேட்களை எதிர்நோக்கி ரசிகர்கள் காத்திருக்கின்றனர்

'𝐑𝐄𝐁𝐄𝐋'𝐋𝐈𝐍𝐆 𝐖𝐎𝐑𝐋𝐃𝐖𝐈𝐃𝐄 𝐎𝐍 𝐒𝐄𝐏 𝟐𝟖, 𝟐𝟎𝟐𝟑.#Salaar #TheEraOfSalaarBegins#Prabhas @prashanth_neel @VKiragandur @hombalefilms @shrutihaasan @PrithviOfficial @IamJagguBhai @sriyareddy @bhuvangowda84 @RaviBasrur @shivakumarart @anbariv @SalaarTheSaga pic.twitter.com/TRc8h4iAmT

— Hombale Films (@hombalefilms) August 15, 2022