பாகுபலி படத்தின் மூலம் உலகம் முழுவதும் ரசிகர்களை பெற்ற நடிகர் பிரபாஸ்.இந்த படம் இரண்டு பாகங்களாக வெளியாகி ,இரண்டு படங்களுமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வசூல் வேட்டை நடத்தின.சாஹோ படத்தை தொடர்ந்து பிரபாஸ் நடித்து வரும் படம் ராதே ஷ்யாம்.இந்த படத்தை ஜில் படத்தின் மூலம் பிரபலமான ராதாகிருஷ்ண குமார் இயக்குகிறார்.

UV க்ரியேஷன்ஷுடன் இணைந்து கோபி கிருஷ்ணா மூவிஸ் இந்த படத்தை தயாரிக்கின்றனர்.பூஜா ஹெக்டே இந்த படத்தில் கதாநாயகியாக நடித்துவருகிறார்.1970-ல் நடைபெறும் ரொமான்டிக் கதையாக இது இருக்கும் என்று தெரிகிறது.கடந்த சில வருடங்களாக ஆக்ஷன் மோடில் இருந்த பிரபாஸ் இந்த படத்தில் ரொமான்டிக் ஹீரோவாக களமிறங்குகிறார்.

இந்த படத்தின் தென்னிந்திய மொழிகளுக்கு Dear Comrade,மான்ஸ்டர்,பண்ணையாரும் பத்மினியும் உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்த இளம் இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார்.இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை ஏற்றியிருந்தது.இந்த படம் மார்ச் 11ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

படத்தின் ரிலீஸ் நெருங்கி வரும் வேளையில் இந்த படத்தின் புதிய ட்ரைலர் ஒன்றை மார்ச் 2ஆம் தேதி வெளியிடுவதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையே இந்த புதிய ட்ரைலருக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

Celebrate love in the grandest way possible! The release trailer of #RadheShyam out on March 2nd at 3 PM.#RadheShyamReleaseTrailer #Prabhas @hegdepooja @director_radhaa@UV_Creations #BhushanKumar @TSeries @GopiKrishnaMvs@AAFilmsIndia @RedGiantMovies_ @RadheShyamFilm pic.twitter.com/Lm80GQqkwV

— Pooja Hegde (@hegdepooja) February 28, 2022