தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகராக வலம் வரும் நடிகர் பிரபாஸ் அடுத்ததாக நேரடி பாலிவுட் திரைப்படமாக ஹிந்தி மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் ஆதிபுருஷ் படத்தில் நடித்துள்ளார். இதிகாசக் கதைகளைமான இராமாயணத்தைத் தழுவி தயாராகியிருக்கும் ஆதிபுருஷ் திரைப்படத்தின் இறுதி கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

முன்னதாக கன்னட சினிமாவில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான கே ஜி எஃப் படத்தின் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் சலார் படத்தில் தற்போது பிரபாஸ் நடித்து வருகிறார். இதனிடையே இயக்குனர் ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில் ரொமான்டிக் ஆக்ஷன் திரைப்படமாக தயாராகியிருக்கும் ராதேஷ்யாம் படத்தில் பிரபாஸ் கதாநாயகனாகவும் பூஜா ஹெக்டே கதாநாயகியாகவும் நடித்துள்ளனர்.

மேலும் பாக்யஸ்ரீ, கிருஷ்ணம் ராஜு, சத்யராஜ், ஜெகபதிபாபு, முரளி சர்மா உள்ளிட்டோர் ராதேஷ்யாம் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். UV கிரியேஷன்ஸ் மற்றும் T-SERIES பிலிம்ஸ் இணைந்து தயாரிக்க, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என 5 மொழிகளில் வெளியாகும் ராதே ஷ்யாம் படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்ய, ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். இசையமைப்பாளர் தமன்.S பின்னணி இசை சேர்க்கிறார்.

கடந்த ஜனவரி 14ஆம் தேதி ரிலீஸ் ஆக இருந்த ராதே ஷ்யாம் திரைப்படத்தின் ரிலீஸ் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தள்ளிப்போன நிலையில், வருகிற மார்ச் 11ம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ராதேஷ்யாம் படம் ரிலீசாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று (பிப்ரவரி 14ஆம் தேதி) காதலர் தினத்தை முன்னிட்டு ராதே ஷ்யாம் திரைப்படத்திலிருந்து புதிய ரொமான்டிக் Glimpse வீடியோ வெளியானது. அந்த வீடியோ இதோ...