வித்தியாசமான நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெரும் தொலைக்காட்சி விஜய் டிவி.இவர்களது வித்தியாசமான நிகழ்ச்சிகளுக்கென்றே தனியொரு ரசிகர் பட்டாளமே உள்ளது.இவர்களின் நிகழ்ச்சிகளை பார்த்து பல முன்னணி தொலைக்காட்சிகளும் அதையே மீண்டும் தங்கள் சேனலில் ஒளிபரப்புவார்கள்.

அப்படி விஜய் டிவியின் செம ஹிட் நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர்.சாதாரண மக்களிடம் இருக்கும் பாடும் திறமைகளை கண்டுபிடித்து அவர்களுக்கு பெரிய அங்கீகாரம் வாங்கி தரும் ஒரு நிகழ்ச்சியாக சூப்பர் சிங்கர் உள்ளது.இந்த தொடரில் பங்கேற்ற பலரும் பிரபலங்களாக மாறியுள்ளனர்.பலர் பின்னணி பாடகர்களான உயர்ந்துள்ளனர்.

இந்த நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இந்த நிகழ்ச்சியில் பங்குபெற்ற பலரும் பிரபலங்களாக மாறியுள்ளனர்.இந்த தொடரில் இசைக்கலைஞராக இருந்து பல நிகழ்ச்சிகளுக்கு உறுதுணையாக இருந்தவர் அரவிந்த் ஸ்ரீனிவாஸ்.நோட்டா,விஸ்வரூபம் 2 உள்ளிட்ட படங்களில் பாடல்கள் பாடியும் அசத்தியுள்ளார்.

இவருக்கு தற்போது ஷர்மதா என்பவருடன் நிச்சயதார்த்தம் நடைபெற்று முடிந்துள்ளது.இதுகுறித்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் செம வைரலாகி வருகிறது.இவருக்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.இவரது திருமண தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

View this post on Instagram

A post shared by Soundarya Bala Nandakumar (@soundarya_offl)

View this post on Instagram

A post shared by Narayanan Ravishankar (@singer_narayananravishankar)