தமிழ் தொலைக்காட்சியில் வரும் சிலர் பார்வையாளர்களின் மனதை அதிகம் கவர்ந்து விடுவார்கள். அவர்கள் காலம் கடந்தும் மக்களின் ரசனைக்கு உகந்தவராக இருந்து வருவார்கள். அதன்படி மக்கள் மனதை பல ஆண்டு காலமாக கவர்ந்து அவர்களுக்கு பிடித்த தொலைக்காட்சி பிரபலமாக இருந்து வருபவர் ஈரோடு மகேஷ். விஜய் தொலைகாட்சியில் தொகுப்பாளராக அறிமுகமான இவர் பின் தொடர்ந்து பல முக்கியமான நிகழ்சிகளில் தொகுப்பாளராகவும் நடுவராகவும் கடந்த 15 ஆண்டுகளாக இருந்து வருகிறார். மேலும் தொகுப்பாளரை தாண்டி தமிழ் பற்றுள்ள மனிதர். இவரது தமிழுக்கே தனி ரசிகர் கூட்டம் இருந்து வருகிறது. மேலும் மேடை பேச்சு வல்லுனராகவும் இருந்து வருகிறார்.

இவரது 15 ஆண்டுகால தொலைக்காட்சி பயணத்தை கொண்டாடும் விதமாக நமது கலாட்டா தமிழ் சிறப்புநிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் ஈரோடு மகேஷ் கலந்து கொண்டு தனது பயணம் குறித்து பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

இந்த நிகழ்வில் சமீபத்தில் ஈரோடு மகேஷ் விஜய் டிவி விருது விழாவில் தன் அம்மாவின் முன் அழுது தனது அன்பை வெளிபடுத்தியிருப்பார் இந்த நிகழ்வு பார்வையாளர்களை நெகிழ செய்தது. அதே நேரத்தில் சிலர் இந்நிகழ்வினை விமர்சனத்திற்கு உள்ளாக்கினர் இது குறித்து ஈரோடு மகேஷ் அவரது மனைவியிடம் கேட்டப்போது, "அவருடன் இருக்குறதால அவர் அழுறது எனக்கு தப்பா தெரிஞ்சது இல்லை.. அப்படி அவர் அழுவுறத கிண்டல நினைக்குறவங்க அம்மாவோட அந்த அன்பு இல்லாதவங்க, குடும்பத்தின் உணர்வு இல்லாத மனிதர்கள். அதனால் நான் அவங்கள பத்தி நான் யோசிச்சது இல்லை.. அவர் ரொம்ப உணர்ச்சிவசமான மனிதர். அம்மாவ பார்த்தா இப்படிதான் பண்ணுவார். அவருக்கு அம்மானா அப்படி பிடிக்கும்..” என்றார்.

மேலும் தொடர்ந்து ஈரோடு மகேஷ் இது குறித்து பேசுகையில், “எனக்கு சும்மாவே வீட்ல அம்மாவ பற்றி பேசுனா அழுகை வந்திடும்.‌ எனக்கு தெரியும் எங்க அம்மா என்னென்ன பார்த்துருக்காங்க னு.. மாற்று திறனாளிகள் எந்த வீட்ல இருந்தாலும் அவங்கள ரொம்ப ரொம்ப நல்லா பார்த்துங்கோங்க.. அது என்னுடைய வேண்டுகோள். கண் காது பேச்சு எதாவது ஒண்ணு இல்லாம போறது ரொம்ப கஷ்டம். வாழ்கையில் அந்த விஷயம் இல்லாமல் போறது ரொம்ப சிரமம். அப்படி காது கேளாத சூழல்ல என்னையும் என் அண்ணனையும் ஒரு ஆளா மாத்திருக்காங்கள..அந்த தாய் அ கொண்டாட வேண்டாமா? அந்த தாய் பற்றி பேசும்போது நான் அழ வேண்டாமா? அந்த தாயை பார்த்தால் நான் சந்தோஷபட வேண்டாமா? "என்றார்.

பின் தொடர்ந்து "நான் எப்போது என் உணர்வுகளை அடக்கியதே இல்லை. என் உணர்வுகள் எனக்கானது.. அதை யாருக்காவும் வெளிபடுத்தவில்லை. எனக்கு தோன்றிய உணர்வை நான் வெளிபடுத்துகிறேன். சிலருக்கு அது அதே உணர்வாக கடத்தபடலாம். சிலருக்கு விமர்சனத்திற்கு உள்ளாகலாம். சிலருக்கு கேளி செய்லாம், புறம் தள்ளலாம். யாரை பற்றியும் எனக்கு கவலை இல்லை. என் அம்மா ..‌என் உணர்வு..‌என் வாழ்க்கை..” என்றார் ஈரோடு மகேஷ்.

மேலும் பல சுவாரஸ்யமான தகவல்களை ஈரோடு மகேஷ் பகிர்ந்து கொண்ட முழு வீடியோ இதோ..