பீகாரை சேர்ந்த நிஷா உபாத்யாய் என்பவர் பிரபல போஜ்புரி பாடகி. பல்வேறு வகையான பாடல்களை கசிதாமாக பாடி ரசிகர்களின் பாராட்டுகளை பெற்று பிரபலமானவர் நிஷா. அதன்படி பல்வேறு தனியார் கலாச்சார நிகழ்வுகளில் பங்கேற்று பாடி வருபவர் நிஷா. இவரது நாட்டுப்புற பாடல்களுக்காகவும் இவரது தனித்துவமான குரல்வளத்திற்கும் தனி ரசிகர் கூட்டம் இருந்து வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் சரண் மாவட்டத்தில் உள்ள செந்துவர் என்ற கிராமத்தில் விழா ஒன்றில் பாடுவதற்கு பாடகி நிஷா உபாத்வாய் வந்திருந்தார். அதிகாலை வரை கோலாகலமாக ரசிகர்களின் ஆரவாரத்துடன் இசை நிகழ்ச்சி நடைபெற்றதாக கூறப்படுகிறது.

வீரேந்தி சிங் என்பவரது வீட்டில் நடைபெற்ற இந்ந கலாச்சார விழாவில் நிஷா படிக் கொண்டிருந்தார். அப்போது கூட்டத்தில் இருந்த இளைஞர் ஒருவர் யாரும் எதிர்பாராத விதத்தில் திடீரென துப்பாக்கியால் பாடகியை சுட்டுள்ளார். இதில் பாடகி நிஷாவின் இடது தொடையில் துப்பாக்கி குண்டு பாய்ந்தது. அதிர்ச்சியில் பலத்த காயத்துடன் நிஷா மேடையிலே மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது. உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் அறுவை சிகிச்சை நடைபெற்றது. அறுவை சிகிச்சையின் மூலம் தொடையில் பாய்ந்த தோட்டாவை மருத்துவர்கள் அகற்றினர். தற்போது நிஷா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் உடல்நிலை முன்னேறி வருவதாகவும் தகவல்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் அதிகாரிகள் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். விசாரணையில் ஈடுப்பட்டதில் இந்த சம்பவம் குறித்து எந்தவொரு தகவலும் கிடைக்கவில்லை. விசாரணை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அந்த இளைஞர் விழாவின் உற்சாக மிகுதியில் வானத்தை நோக்கி துப்பாக்கியில் சுட்டுள்ளார். அது எதிர்பாராத விதமாக பாடகி நிஷா மீது பாய்ந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. சமீப காலமாக குற்றங்கள் பொதுவெளியில் மக்கள் கூடுமிடங்களில் நடந்தேறி வருகிறது. இந்தியாவில் இது போன்ற துப்பாக்கி கலாச்சாரம் தலைதோங்குவது வருத்தமளிக்கிறது என்றும் இது போன்ற நிகழ்வு நடைபெறமால் அரசு பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் இணையத்தில் கருத்துகளை பொதுமக்கள் பதிவிட்டு வருகின்றனர்.