இந்திய சினிமாவில் ஆகசிறந்த நடிகராக வலம் வருபவர் நடிகர் நவாசுதீன் சித்திக். நுணுக்கமான நடிப்பை வெளிபடுத்தி தனக்கென தனி ரசிகர் கூட்டத்தையே உருவாக்கி வைத்துள்ள இவர் இந்தியில் பல ஹிட் திரைப்படங்களில் கதாநாயகனாகவும் வில்லனாகவும் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்தும் அசத்தியிருப்பார். அதன்படி கேங்க்ஸ் ஆப் வசிப்பூர், போட்டோகிராப், லஞ்ச்பாக்ஸ், ராமன் ராகவ் 2.0 போன்ற பல படங்கள் ரசிகர்களை கவர்ந்த திரைப்படமாக இருந்து வருகிறது. தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து கார்திக் சுப்புராஜ் இயக்கிய ‘பேட்ட’ திரைப்படத்தில் வில்லனாக நடித்து அசத்தியிருப்பார். தற்போது இவர் தெலுங்கு திரைத்துறையிலும் நடித்து வருகிறார் நடிகர் நவாசுதீன் சித்திக்

இந்நிலையில் தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தை தடை செய்தது வரவேற்புக்குரியது என்று நவசுதீன் சித்திக் கருத்து தெரிவித்துள்ளதாக செய்தி பக்கங்களிலும் இணையத்திலும் வதந்தி பரவி வந்தது. இது குறித்து ரசிகர்கள் கேள்விகளை எழுப்ப இந்நிலையில் இது தொடர்பாக இணையத்தில் பரவி வந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நடிகர் நவாசுதீன் சித்திக் அவரது ட்விட்டர் பக்கத்தில், “போலி செய்திகளை TRP சுயலாபத்திற்காக பரப்பாதீர்கள்.. நான் எப்போது ஒரு படத்தை தடை செய்ய வேண்டும் என்று சொன்னதே இல்லை... திரைப்படங்களை தடை செய்வதை நிறுத்துங்கள்.. போலி செய்திகளை பரப்புவதை நிறுத்துங்கள்.. “ என்று குறிப்பிட்டுள்ளார் நடிகர் நவாசுதீன் சித்திக்..

இதையடுத்து நவாசுதீன் சித்திக் அவரது பதிவினை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர். இயக்குனர் சுத்ப்டோ சென் இயக்கத்தில் கடந்த மே 5 ம் தேதி இந்தி, தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியான திரைப்படம் ‘தி கேரளா ஸ்டோரி’ சர்ச்சைக்குரிய கதைகளத்தை கொண்டுள்ளதால் இப்படத்தை வங்க தேசம் உள்ளிட்ட பகுதிகளை தடை செய்துள்ளனர். மேலும் தமிழ் நாட்டில் இப்படத்தை திரையரங்க உரிமையாளர்களே தூக்கி உள்ளனர். இருந்தும் இப்படத்திற்கு வட இந்திய பகுதிகளில் ஆதரவு எழுந்து பின் 37 நாடுகளில் இப்படத்தை கூடுதலாக வெளியிட்டனர். வெளியான சில நாட்களிலே வசூல் ரீதிகா மிகபெரிய வெற்றியை தி கேரளா ஸ்டோரி திரைப்படம் பெற்று வசூலில் ரூ 200 கோடியை பெற்று கவனத்தை ஈர்த்துள்ளது.