புகழ்மிக்க எழுத்தாளர் அமரர் கல்கியின் அற்புதப் படைப்பான பொன்னியின் செல்வன் நாவலை தழுவி, இயக்குனர் மணிரத்னம் தனது கனவு திரைப்படமாக உருவாக்கியிருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு ஜெயமோகன் அவர்கள் வசனங்களை எழுத, தோட்டா தரணியின் கலை இயக்கத்தில், ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்துள்ளார். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
சீயான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யாராய், த்ரிஷா, பிரகாஷ் ராஜ், சரத்குமார், பார்த்திபன், ஜெயராம், இளையதிலகம் பிரபு, விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா லெக்ஷ்மி, நிழல்கள் ரவி, ஷோபிதா, லால், அஷ்வின் காக்கமனு, ஜெயசித்ரா, கிஷோர், அர்ஜுன் சிதம்பரம், ரியாஸ்கான் உள்ளிட்ட பலர் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து 2 பாகங்களாக தயாரித்துள்ள பொன்னியின் செல்வனின் முதல் பாகம் கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி ரிலீஸாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்ப்பை பெற்று 450 கோடிக்கும மேல் வசூலித்துள்ளது. தொடர்ந்து 2வது பாகம் அடுத்த 6-9 மாதங்களுக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திரையரங்குகளில் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் OTT ரிலீஸுக்காக ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்த நிலையில், வருகிற நவம்பர் 4-ம் தேதி முதல் அமேசான் பிரைம் வீடியோவில் பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியாகும் என தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
presenting the much awaited, larger than life, historical action-drama
— prime video IN (@PrimeVideoIN) October 28, 2022
#PS1onPrime, rent to watch now!
Coming to Prime on Nov 4#ManiRatnam @arrahman @MadrasTalkies_ @LycaProductions@tipsofficial pic.twitter.com/Cq34q7zdD7