தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் தமன்னா.2017-ல் வெளியாகி சூப்பர்ஹிட்டான அதே கண்கள் படத்தின் இயக்குனர் ரோஹின் வெங்கடேசன் இயக்கும் பெட்ரோமாக்ஸ் படத்தில் நடித்து வருகிறார்.ஹாரர் காமெடி படமாக இந்த படம் உருவாகி வருகிறது.

யோகி பாபு,ராமதாஸ்,மன்சூர் அலி கான்,விஜய் டிவி புகழ் TSK உள்ளிட்டோர் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.Eagle Eyes Productions இந்த படத்தை தயாரித்து வருகின்றனர்.இந்த படம் அக்டோபர் 11ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இந்த படத்தின் ட்ரைலர் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.படத்தின் ரிலீஸை முன்னிட்டு இந்த படத்தின் மேக்கிங் வீடீயோவை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.இந்த மேக்கிங் வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்