பெரம்பலூரில் முன்விரோதம் காரணமாக இரட்டைக் கொலை நடந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அரியலூர் மாவட்டம் இலுப்பையூர் கிராமத்தைச் சேர்ந்த 37 வயதான ஆனந்த், மெக்கானிக்காக இருந்து வந்தார். திருமணத்திற்குப் பிறகு, பெரம்பலூர் மாவட்டம் நல்லறிக்கை கிராமத்தில் உள்ள தனது மாமனார் வீட்டில் குடும்பத்துடன் தங்கி வேலை செய்து வந்துள்ளார்.

இந்நிலையில், அதே ஊரைச் சேர்ந்த 34 வயதான வேலாயுதம், ஆட்டோ ஓட்டுநரான இருந்து வந்துள்ளார். இதனிடையே, இவர்கள் இருவருக்கும் முன்விரோதம் இருந்ததாகக் கூறப்படுகிறது.

சம்பவத்தன்று பெரம்பலூர் நல்லறிக்கை டாஸ்மாக் மதுக்கடையில் சண்முகம் மற்றும் ஆனந்த் ஆகிய இருவரும் மது அருந்தியுள்ளனர். அப்போது, இருவருக்கும் போதை தலைக்கேறிய நிலையில், இருவருக்குள்ளும் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் ஆனந்த், தான் வைத்திருந்த கத்தியால் சண்முகத்தைக் கடுமையாகத் தாக்கியுள்ளார். இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த சண்முகத்தை, அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனால் அதிர்ச்சியடைந்த சண்முகத்தின் மூத்த அண்ணன் முருகானந்தம், ஆனந்தைத் தேடி டாஸ்மாக் கடைக்குச் சென்றுள்ளார். அங்கு, அவர் மது அருந்திக் கொண்டிருந்ததைக் கண்டவுடன், ஆனந்தை அங்கிருந்த பீர் பாட்டிலால் கடுமையாகத் தாக்கி, குத்தி கொன்றுள்ளார்.

அரசு டாஸ்மாக் கடையில் அடுத்தடுத்த கொலை நடந்துள்ளதை அடுத்து, வழக்குப் பதிவு செய்த போலீசார், இந்த இரு கொலையிலும் தொடர்புடைய முருகானந்தம் உள்ளிட்ட 4 பேரை, போலீசார் தேடிவருகின்றனர்.

இதனிடையே, பெரம்பலூரில் முன்விரோதம் காரணமாக அடுத்தடுத்து இரட்டைக் கொலை நடந்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.