தனக்கென தனி ஸ்டைலில் மிகச் சிறப்பாக நடித்து தனக்கென மிகப் பெரிய ரசிகர்கள் சாம்ராஜ்யத்தை கொண்டவர் நடிகர் சிலம்பரசன்.TR. தனது அடுத்த மெகா ஹிட் படமாக சிலம்பரசன்.TR நடிப்பில் வெளிவர இருக்கிறது பத்து தல திரைப்படம். கன்னடத்தில் சூப்பர் ஹிட்டான மஃப்டி படத்தின் ரீமேக்காக சில்லுனு ஒரு காதல் மற்றும் நெடுஞ்சாலை திரைப்படங்களின் இயக்குனர் ஒபெலி.N.கிருஷ்ணா இயக்கத்தில் சிலம்பரசன்.TR உடன் இணைந்து கௌதம் கார்த்திக் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள பத்து தல திரைப்படத்தில், பிரியா பவானி ஷங்கர், கலையரசன், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், அனு சித்தாரா மற்றும் டீஜே அருணாசலம் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். பத்து தல படத்திற்கு ஃபரூக்.J.பாஷா ஒளிப்பதிவில், பிரவீன்.KL படத்தொகுப்பு செய்ய இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ஸ்டூடியோ கிரீன் சார்பில் KE.ஞானவேல் ராஜா அவர்களின் தயாரிப்பில் சிலம்பரசன்.TR நடித்துள்ள பத்து தல திரைப்படம் பென் ஸ்டுடியோஸ் நிறுவனம் வெளியிட வருகிற மார்ச் 30 ஆம் தேதி உலகம் எங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. முன்னதாக வெளிவந்த பத்து தல படத்தின் அதிரடியான ட்ரெய்லர் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதனிடையே நமது கலாட்டா சேனலுக்கு அளித்த பிரத்யேகப் பேட்டியில் பேசிய தயாரிப்பாளர் KE.ஞானவேல் ராஜா அவர்கள் நடிகர் சிலம்பரசன்.TR அவர்களின் குணம் குறித்து பேசினார். அந்த வகையில், திடீரென சிலம்பரசன்.TR அவர்களுக்கு பெரிய வரவேற்பு.. அவரை கொண்டாட ஆரம்பிக்கிறோம்.. உங்களிடமிருந்தும் ஒரு எக்கச்சக்கமான ஆதரவு... சிலம்பரசன்.TR அவர்களை கொண்டாடுவது உங்களது கடமை என செய்கிறீர்களா? என கேட்ட போது,

"கடமை என்பது இல்லை.. சிலம்பரசன்.TR-இடமும் இதைத்தான் சொன்னேன். உன் இடம் இங்கே இருக்கிறது அதை யாருமே எடுத்து விடவில்லை. யாரும் எடுக்கவும் முடியாது. ஆனால் நீங்கள் அதில் உட்காராமல் எங்கேயோ சுற்றிக் கொண்டிருக்கிறீர்கள். தமிழ் மக்கள் அவர்கள் மனதில் சிம்பு இந்த இடம் என வைத்து விட்டார்கள். அது வேறு ஆளுக்கு கிடையவே கிடையாது. தயவுசெய்து இங்கு வந்து உட்கார்ந்து விட்டீர்கள் அதை விட்டு இறங்காதீர்கள்... இதை நீங்கள் சிம்புவின் பேச்சிலும் பார்த்திருப்பீர்கள்.. அவரும் இனி நல்ல நல்ல படங்கள் பண்ணுவேன் என தெரிவித்திருக்கிறார். அந்த எண்ணம் அவருடைய மனதில் தீர்க்கமாக இருக்கிறது. இன்றைய இளம் திறமையாளர்களில் அவருக்கு இருக்கும் எனர்ஜியும் ரசிகர்களும் யாருக்கும் கிடையாது. நான் ஆறாம் வகுப்பு படிக்கும் போது இருந்து சிலம்பரசன்.TRஐ பார்த்துக் கொண்டிருக்கிறேன். நண்பனாக அல்ல ரசிகனாக. 17 வயதில்தான் நண்பர்களானோம் மலேசியா சென்ற போது, அப்போது எனக்கு இவரை பார்க்கும் போது பிரம்மிப்பாக தான் இருந்தது. என்னுடைய வாழ்வில் ஒரு மோசமான காலகட்டம் இருந்தது அதேபோல் சிலம்பரசன்TR-ன் வாழ்க்கையிலும் ஒரு மோசமான காலகட்டம் இருந்தது. இதையெல்லாம் தாண்டி ஒரு மன உறுதி! அந்த உடற்பயிற்சி வீடியோ பயங்கர உத்வேகமாக இருந்தது. ஆனால் எல்லாம் தாண்டி இவ்வளவு பெரிய ஹீரோ ஒரு குழந்தைதான்! உடல் எடையை குறைத்து விட்டு இந்த வயிற்றை தொட்டுப் பாருங்கள் என மதுரையில் ஷூட்டிங் ஸ்பாட்டில் என் கையை பிடித்து வைக்கிறார். அப்போதுதான் நான் நினைத்தேன் எவ்வளவு வெள்ளந்தியான ஒரு மனிதர். பக்கத்தில் உட்கார்ந்து பேசுவோம் ஏதாவது ஒரு வார்த்தையாவது யாரையாவது பற்றி நெகட்டிவ் வருமா என்று பார்த்தால் ஒரு வார்த்தை கூட யாரைப் பற்றியும் நெகட்டிவாக வராது. அத்தனையும் பாசிட்டிவ் தான். எல்லாமே பாசிட்டிவ் தான்… யாராவது புதுமுகங்கள் ஏதாவது ஒரு படம் செய்து நன்றாக இருந்தால் உடனே அவரை தொலைபேசியில் அழைத்தோ நேரில் அழைத்தோ பார்த்து பாராட்டுவார் அது ஒரு மிகப்பெரிய குணம்" என தெரிவித்துள்ளார். தயாரிப்பாளர் KE.ஞானவேல் ராஜா அவர்களின் அந்த முழு பேட்டி இதோ…