தமிழ் சினிமாவின் மிக முக்கிய இயக்குநர்களில் ஒருவராகவும் நடிகராகவும் வலம் வரும் பார்த்திபன், இயக்குனர் மணிரத்னத்தின் இயக்கத்தில் பிரம்மாண்டமாக தயாராகி வரும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.மேலும் நடிகர் கௌதம் கார்த்திக்குடன் இணைந்து யுத்த சத்தம் திரைப்படத்திலும் நடித்து வருகிறார் பார்த்திபன்.

தொடர்ந்து வித்தியாசமான முயற்சிகளையும் சிறந்த கலைப் படைப்புகளையும் வழங்கி வரும் இயக்குனர் பார்த்திபனின் அடுத்த சாதனை முயற்சியாக உருவாகிறது இரவின் நிழல். ஆசியாவிலேயே முதல்முறையாக ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்டுள்ள இரவின் நிழல் திரைப்படத்தை இயக்குனர் பார்த்திபன் எழுதி இயக்குகியுள்ளார்.

பயாஸ்கோப் LLC தயாரிப்பில் ராம்ஜி ஒளிப்பதிவு செய்துள்ள இரவின் நிழல் படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இந்நிலையில் ஏ.ஆர்.ரகுமானின் இசையில் இரவின் நிழல் திரைப்படத்திற்காக இயக்குநர் பார்த்திபன் ஒரு பாடலை எழுதியுள்ளார். இதுகுறித்து இயக்குனர் பார்த்திபன் தனது டுவிட்டர் பக்கத்தில்,

‘இரவின் நிழல்’-ஏ ஆர் ரஹ்மான் இசை ம்யூரல்!
பின்னணி இசைக்காக அவர் குரலில் ஒரு ட்யூனை அனுப்பி என்னை எழுதச் சொன்னார்.கேட்ட நொடி முதல் கிறங்கிக் கிடக்கிறேன் high-யில். இறங்கி வந்து அந்த abstract tune-க்கு வரி வடிவம் கொடுக்கும் முயற்சியில் ஒரு வாரம் மூழ்க, திவும் செய்யப்பட்டது.சங்குக்குள் அடக்கப்பட்ட கங்கை போல்,முழு படத்தின் வீரியத்தையும் ஒரு பாடலில்.சிலிர்த்து சிறகடித்து பறக்கிறேன் பரவசத்தில்.ரசித்து சமைத்தால் தானே இலைக்கு(திரைக்கு)வரும்போது ருசிக்கும்.

என தெரிவித்துள்ளார். எனவே தொடர்ந்து இரவு நிழல் திரைப்படத்தின் அடுத்தடுத்து அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

‘இரவின் நிழல்’-ஏ ஆர் ரஹ்மான் இசை ம்யூரல்!
பின்னணி இசைக்காக அவர் குரலில் ஒரு ட்யூனை அனுப்பி என்னை எழுதச் சொன்னார்.கேட்ட நொடி முதல் கிறங்கிக் கிடக்கிறேன் high-யில். இறங்கி வந்து அந்த abstract tune-க்கு வரி வடிவம் கொடுக்கும் முயற்சியில் ஒரு வாரம் மூழ்க,
Conti… pic.twitter.com/0qlAqYbzDq

— Radhakrishnan Parthiban (@rparthiepan) November 25, 2021

Conti..
பதிவும் செய்யப்பட்டது.சங்குக்குள் அடக்கப்பட்ட கங்கை போல்,முழு படத்தின் வீரியத்தையும் ஒரு பாடலில்.சிலிர்த்து சிறகடித்து பறக்கிறேன் பரவசத்தில்.ரசித்து சமைத்தால் தானே இலைக்கு(திரைக்கு)வரும்போது ருசிக்கும். pic.twitter.com/QK12PVvb5T

— Radhakrishnan Parthiban (@rparthiepan) November 25, 2021