கலையின் மீது என்றும் தீராத தாகத்தோடு தொடர்ந்து புதுப்புது வித்தியாசமான முயற்சிகளை மேற்கொள்ளும் இயக்குனர் பார்த்திபனின் அடுத்த சாதனை முயற்சியாக உலகில் முதல் நான் லீனியர் சிங்கிள் ஷாட் (Non Linear Single Shot Movie) திரைப்படமாக உருவாகியுள்ள திரைப்படம் இரவின் நிழல்.

இரவின் நிழல் திரைப்படத்தில் இயக்குனர் பார்த்திபனுடன் இணைந்து வரலட்சுமி சரத்குமார், ப்ரிகிடா, ரோபோ ஷங்கர் ,பிரியங்கா மற்றும் கிருஷ்ணா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி.எஸ்.தாணு அவர்கள் வெளியிடும் இரவு நிழல் திரைப்படம் வருகிற ஜூன் 24-ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது.

பயாஸ்கோப் பிலிம் ஃபிரேமர்ஸ் தயாரிப்பில், இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இரவின் நிழல் திரைப்படத்திற்கு ஆஸ்கார் விருது பெற்ற VFX கலைஞர்களான காட்டலாங்கோ லியோன் மற்றும் கிரேக் மேன் ஆகியோர் பணியாற்றி உள்ளனர். முன்னதாக கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் இரவின் நிழல் திரைப்படம் திரையிடபட்டது குறிப்பிடத்தக்கது

சமீபத்தில் வெளிவந்த திரைப்படத்தின் இரவின் நிழல் டீசர் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இரவின் நிழல் திரைப்படத்தின் அனைத்து பாடல்களும் தற்போது வெளியானது. அந்த பாடல்களை கீழே உள்ள லிங்கில் கேட்டு மகிழுங்கள்.

Listen to the magical tracks created by @arrahman & @rparthiepan for #IravinNizhal that hits the right part of your memory through some soulful songs 🤩

Tamil 🔗 https://t.co/lCVdhh6T9T

Telugu 🔗 https://t.co/DtAx9XlciI@theVcreations @ArthurWisonA @varusarath5 @GenauRanjith pic.twitter.com/qdNEhYxj8N

— Divo (@divomovies) June 6, 2022