தமிழ் சினிமாவின் குறிப்பிடப்படும் இயக்குனரும் நடிகருமான பார்த்திபன் கடைசியாக சமீபத்தில் அமேசான் பிரைம் வீடியோவில் வெளிவந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த சுழல் வெப் சீரிஸில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். முன்னதாக இயக்குனர் மணிரத்னத்தின் இயக்கத்தில் பிரமாண்டமாக தயாராகியிருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் சின்ன பழுவேட்டரையர் எனும் முக்கிய வேடத்தில் பார்த்திபன் நடித்துள்ளார். பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கலையின் மீது தீராத தாகம் கொண்ட இயக்குனராக தொடர்ந்து புது புது முயற்சிகளை கையாண்டு நம் கற்பனைக்கு அப்பாற்பட்ட படைப்புகளை வழங்கி வரும் இயக்குனர் பார்த்திபன் இயக்கி நடித்துள்ள அடுத்த சாதனை முயற்சி இரவின் நிழல். உலகத்திலேயே முதல் நான் லீனியர் சிங்கிள் ஷாட் திரைப்படமாக (Non Linear Single Shot Movie) இரவின் நிழல் திரைப்படத்தை பார்த்திபன் உருவாக்கியுள்ளார்.

இரவின் நிழல் திரைப்படத்தில் இயக்குனர் பார்த்திபனுடன் இணைந்து வரலட்சுமி சரத்குமார், ப்ரிகிடா, ரோபோ ஷங்கர் ,பிரியங்கா மற்றும் கிருஷ்ணா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பயாஸ்கோப் பிலிம் ஃபிரேமர்ஸ் தயாரித்துள்ள இரவின் நிழல் திரைப்படத்தை வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி.எஸ்.தாணு அவர்கள் வெளியிட வருகிற ஜூலை 15ஆம் தேதி இரவின் நிழல் திரைப்படம் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது.

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இரவின் நிழல் திரைப்படத்திற்கு ஆஸ்கார் விருது பெற்ற VFX கலைஞர்களான காட்டலாங்கோ லியோன் மற்றும் கிரேக் மேன் ஆகியோர் பணியாற்றியுள்ளனர். இந்நிலையில், இரவின் நிழல் படத்திலிருந்து பாபஞ் செய்யாதிரு பாடலின் லிரிக்கல் வீடியோ தற்போது வெளியானது. பாபஞ் செய்யாதிரு பாடல் லிரிக்கல் வீடியோ இதோ…