நடிகை த்ரிஷா நடிப்பில் வெளியாகவிருக்கும் படம் பரமபதம் விளையாட்டு. த்ரிஷாவின் 60-வது படமான இப்படத்தில் நந்தா, ரிச்சர்ட், வேலராமமூர்த்தி உட்பட பலர் நடிக்கின்றனர். படத்திற்கு அம்ரிஷ் இசையமைத்துள்ளார்.

இந்தப் படத்தை திருஞானம் இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் நடிகை த்ரிஷா, மருத்துவராக கேரக்டரில் நடிக்கிறார். சரியானவற்றை சரியான இடத்தில் சரியான நேரத்தில் சொல்ல வேண்டும் என்பார்கள். ஆனால் சரியான ஒரு விஷயத்தை தவறான நேரத்தில் சொல்வதால் என்ன விளைவு ஏற்படுகிறது என்பது தான் இப்படத்தின் கரு.திருப்பங்கள் நிறைந்த கதையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது இந்த படத்தின் விறு விறு பாடல் வீடியோ வெளியானது.