கொலைகாரன், அக்னிச் சிறகுகள் படங்களைத் தொடர்ந்து தற்போது தமிழரசன் படத்தில் நடித்துள்ளார் விஜய் ஆண்டனி. இந்த படத்தை பாபு யோகேஸ்வரன் இயக்கிவருகிறார். விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார். சோனு சூட் வில்லனாக நடிக்கிறார். இவர்களுடன் பூமிகா, யோகிபாபு, ரோபோ சங்கர், முனீஸ்காந்த், இயக்குனர் மோகன் ராஜாவின் மகன் பிரணவ் உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள்.

இசைஞானி இளையராஜா இந்த படத்திற்கு இசையமைக்கிறார். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்க, புவன் ஸ்ரீனிவாசன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். எஸ்.என்.எஸ். மூவீஸ் சார்பில் கெளசல்யா ராணி இந்த படத்தை தயாரிக்கிறார்.

தற்போது இந்த படத்திலிருந்து பாக்குறப்போ பாக்குறப்போ பாடலின் லிரிக் வீடியோ வெளியானது. இளையராஜா மற்றும் நீத்தி மோகன் பாடியுள்ள இந்த பாடல் வரிகளை ஜெயராம் எழுதியுள்ளார்.