தமிழ் சினிமா ரசிகர்களின் ஃபேவரட் நகைச்சுவை நடிகராக தமிழ் திரை உலகின் முன்னணி நட்சத்திர நகைச்சுவை நடிகராக திகழும் நடிகர் யோகி பாபு வரும் பொங்கல் வெளியிடாக தளபதி விஜய் நடிப்பில் வெளிவர இருக்கும் வாரிசு திரைப்படத்தில் காமெடியனாக நடித்துள்ளார். மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தயாராகிய வரும் ஜெயிலர் திரைப்படத்திலும் சிவகார்த்திகேயனின் அயலான் படத்திலும் நகைச்சுவை வேடங்களில் நடித்துள்ளார்.

நகைச்சுவை கதாபாத்திரங்களில் மட்டுமல்லாமல் நல்ல நடிகராகவும் முன்னணி வேடங்களில் சில படங்களில் கதாநாயகனாகவும் நடித்து வரும் நடிகர் யோகிபாபு, முன்னதாக நடித்த காசேதான் கடவுளடா, சலூன், பூச்சாண்டி ஆகிய திரைப்படங்கள் விரைவில் வெளிவரவுள்ள நிலையில், அடுத்ததாக மெடிக்கல் மிராக்கிள், பூமர் அங்கிள் உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.

இந்த வரிசையில் அறிமுக இயக்குனர் ஷான் இயக்கத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்டு மிகவும் சீரியஸான கதாபாத்திரத்தில் யோகி பாபு நடித்துள்ள திரைப்படம் பொம்மை நாயகி.யோகி பாபு உடன் இணைந்து சுபத்ரா மற்றும் ஹரிகிருஷ்ணன் ஆகியோர் பொம்மை நாயகி படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இயக்குனர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன் மற்றும் யாழி ஃபிலிம்ஸ் இணைந்து வழங்கும் பொம்மை நாயகி திரைப்படத்திற்கு அதிசயராஜ் ஒளிப்பதிவில், செல்வா.RK படத்தொகுப்பு செய்ய, சுந்தரமூர்த்தி.K.S இசையமைத்துள்ளார். இந்நிலையில் யோகி பாபுவின் பொம்மை நாயகி திரைப்படம் வருகிற பிப்ரவரி 3ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.