இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்த இயக்குனராக தொடர்ந்து தரமான படைப்புகளை வழங்கி வரும் இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் நட்சத்திரம் நகர்கிறது. இதுவரை திரையுலகில் யாரும் தொட தயங்கிய அல்லது பயந்த கதைக்களத்தை மிக தைரியத்தோடும் மிகச் சரியாகவும் நேர்த்தியாகவும் கையாண்டு அற்புத படைப்பாக நட்சத்திரம் நகர்கிறது படத்தை பா.ரஞ்சித் வழங்கினார்.

அடுத்ததாக முதல் முறை நடிகர் சீயான் விக்ரமுடன் கைகோர்த்த பா.ரஞ்சித் தங்கலான் திரைப்படத்தை இயக்கி வருகிறார். ஸ்டுடியோ கிரீன் சார்பில் தயாரிப்பாளர் KE.ஞானவேல் ராஜா அவர்கள் தயாரிப்பில் 3D தொழில்நுட்பத்தில் பிரம்மாண்டமான பீரியட் திரைப்படமாக தற்போது தயாராகி வரும் தங்கலான் திரைப்படத்தை இந்தியாவின் பல்வேறு மொழிகளிலும் வெளியிட பட்டக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

இயக்குனராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் தரமான படைப்புகளை வழங்கி வரும் இயக்குனர் பா.ரஞ்சித் தனது நீலம் புரொடக்ஷன்ஸ் சார்பில் அடுத்த வழங்கும் அற்புத படைப்பு தண்டக்காரன்யம். முன்னதாக பா.ரஞ்சித் தயாரிப்பில் வெளிவந்த இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு படத்தின் இயக்குனர் அதியன் ஆதிரை இயக்கத்தில் தயாராகும் தண்டகாரண்யம் திரைப்படத்தை அதிதி ஆனந்த், S.சாய் தேவானந்த், S.சாய் வெங்கடேஸ்வரன் ஆகியோருடன் ரூபேஷ் குமார் இணைந்து தயாரித்துள்ளார்.

நடிகர்கள் அட்டகத்தி தினேஷ் மற்றும் கலையரசன் இணைந்து முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் தண்டகாரண்யம் திரைப்படத்திற்கு பிரதீப் காளிராஜா ஒளிப்பதிவில், செல்வா.RK படத்தொகுப்பு செய்ய, ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். இந்நிலையில் தண்டகாரண்யம் திரைப்படத்தை அறிவிக்கும் வகையில் அட்டகாசமான டைட்டில் லுக் போஸ்டர் தற்போது வெளியானது. அந்த டைட்டில் லுக் போஸ்டர் இதோ…