தமிழ் சினிமாவின் தரத்தை மென்மேலும் உயர்த்தும் அளவு இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘தங்கலான்’. கோலார் தங்க வயல் கதைகளத்தை அடிப்படையாக கொண்டு மிரட்டலான பீரியட் திரைப்படமாக உருவாகி வரும் இப்படத்தில் சியான் விக்ரம், ஹரிகிருஷ்ணன் , ப்ரீத்தி கரண் வித்யாசமான தோற்றத்தில் நடித்து வருகிறார். மேலும் இப்படத்தில் மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பில் உருவாகும் தங்கலான் திரைப்படத்தில் கிஷோர் குமார் ஒளிப்பதிவு செய்ய செல்வா ஆர் கே படத்தொகுப்பு செய்கின்றார். மேலும் படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

முன்னதாக இப்படத்தின் முன்னோட்டம் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்பை எகிறவைத்தது. இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள தங்கலான் திரைப்படம் நடந்து கொண்டிருக்கும்போது இடையே சியான் விக்ரம் அவர்களுக்கு விலா எலும்பு முறிந்து விபத்து ஏற்பட்டது. இதனால் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப் பட்டது.

இந்நிலையில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, கீர்த்தி சுரேஷ், பகத் பாஸில் ஆகியோர் நடித்து வெளியாகவுள்ள மாமன்னன் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் படக்குழுவினர் மற்றும் திரையுலகின் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

இதில் கலந்து கொண்ட இயக்குனர் பா ரஞ்சித் அவர்கள் பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது.

“படத்தின் பேரை போலவே படமும் பயங்கர பிரம்மாண்டமா வந்திருக்கு.. சில காட்சிகள் மாரி செல்வராஜ் என்னிடம் காட்டினார். ரொம்ப சுவாரசியமா வந்திருக்கு.. வடிவேலு சார் இப்படி ஒரு கதாப்பாத்திரத்தை பார்க்க போகிறோம்.. பாடல்கள் ரொம்ப நல்லா இருக்கு..அரசியல் இயல்பானது தான்., அவருடைய இரண்டு படங்களும் அரசியல் பேசுச்சு.. இந்த படத்தின் பாடல்களும் ஒரு முன்னேற்றத்தை எடுத்துரைக்கும் பாடலாக இருந்தது. நிச்சயமா மாரி செல்வராஜ் அவர் நினைத்த கதையாடலை இதுல சொல்லியிருப்பாருனு நாஅ நம்புறேன்..” என்றார் பா ரஞ்சித்.

அதை தொடர்ந்து அவரிடம் சியான் விக்ரம் நடித்து வரும் தங்கலான் திரைப்படம் எப்போது தொடங்கும் என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர், “தங்கலான் படப்பிடிப்பு முடிய போகுது ஜூன் 15 ம் தேதி துவங்கவிருக்கிறது. இன்னும் 12 நாள் படப்பிடிப்பு இருக்கு.. சீக்கிரம் முடிஞ்சிடும்..” என்றார். பின் தொடர்ந்து சியான் விக்ரம் அவர்கள் எப்படி இருக்கிறார்? என்ற கேள்விக்கு, “அவர் ஜாலியாக இருக்கிறார்” என்றார் இயக்குனர் பா ரஞ்சித்