தமிழ் நாட்டினை சேர்ந்த முதுமலை காப்பகத்தில் தாயைப் பிரிந்து உடம்பில் காயங்களுடன் இருந்த ஒரு குட்டி யானையை ரகு எனப் பெயரிட்டு பழங்குடியின தம்பதியினர் பொம்மன் - பெல்லி அவர்கள் வாழ்வியலையும் வளர்த்து வந்ததை குறித்து ஆவண படமாக தி எலிஃபண்ட் விச்பரர்ஸ் என்ற பெயரில் எடுக்கப்பட்டது . இது உலகின் உயரிய விருதாக கலைஞர்கள் கருதக்கூடிய ஆஸ்கார் விருதினை சிறந்த விருதிற்கான விருதினை தட்டி சென்றது. இந்த நிகழ்வு இந்தியா மக்கள் கொண்டாடி தீர்த்தனர். மேலும் படக்குழுவினரை தமிழ் நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் நேரில் அழைத்து பாராட்டி பொம்மன் மற்றும் பெள்ளி தம்பதி இருவருக்கும் தலா 1 லட்சம் ரூபாயும் இயக்குநர் கார்த்திகி கொன்சால்வேஸ்-க்கு 1 கோடி ரூபாயும் ஊக்கத்தொகை கொடுத்தார்.

இந்நிலையில் தி எலிஃபண்ட் விச்பரர்ஸ் படத்தை இயக்கிய இயக்குனர் கார்த்திகி கோன்சால்வேஸ் மற்றும் தயாரிப்பாளர் குனீத் மோங்கா இருவரும் பிரதமர் நரேந்திர மோடி அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அந்த சந்திப்பில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை பிரதமர் மோடி அவர்கள் தங்களது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து அதனுடன், “ தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ் திரைப்படத்தின் வெற்றி உலகளாவிய கவனத்தையும் பாராட்டுகளையும் ஈர்த்துள்ளது. இன்று, அப்படத்தின் அறிவார்ந்த குழுவைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர்கள் இந்தியாவை மிகவும் பெருமைப்படுத்தியுள்ளனர்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்தில் நடைபெற்ற உலகின் உயரிய விருது விழாவான ஆஸ்கார் விருது விழாவில் இந்தியா சார்பில் சிறந்த குறும்பட ஆவண பட பிரிவில் தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ் விருதினை வென்றதுடன் இந்தியா சார்பில் மேலும் ஒரு விருதினை சிறந்த பாடலுக்கான பிரிவில் ராஜமௌலியின் ‘ஆர் ஆர் ஆர்’ படத்தில் இடம் பெற்றுள்ள நாட்டு நாட்டு பாடல் விருதினை வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.