அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் அசோக் செல்வன், ரித்திகா சிங் நடித்துள்ள படம் ஓ மை கடவுளே. மேலும் இந்தப் படத்தில் பிரபல தொலைக்காட்சி நடிகை வாணி போஜனும் இணைந்திருந்தார். இவர்களுடன் கௌரவ பாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். அக்சஸ் ஃபிலிம் ஃபாக்டரி இப்படத்தை தயாரிக்கிறது.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியானது. லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ளார். விது அய்யனா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

பிரண்ட்ஷிப் ஆன்தம் பாடலும், ஹய்யோ ஹய்யோ பாடலும் வெளியாகி ஈர்த்தது. வெளிநாட்டு விநியோக உரிமையை ஏ.பி.இன்டர்நேஷனல் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. படத்தின் மூன்றாம் பாடல் கதைப்போமா பாடலின் லிரிக் வீடியோ வெளியானது. சித்ஸ்ரீராம் பாடிய இந்த பாடல் வரிகளை சேஷா எழுதியுள்ளார்.