மக்களின் மனம் கவர்ந்த நாயகராகவும் இந்திய சினிமாவின் மிக முக்கிய நடிகராகவும் விளங்கும் நடிகர் தனுஷ் நடிக்கும் ஒவ்வொரு திரைப்படங்களும் எக்கச்சக்கமான எதிர்பார்ப்புகளையும் ஆர்வத்தையும் ஏற்படுத்தி வருகின்றன. அந்த வகையில், ராக்கி மற்றும் சாணிக் காயிதம் என தனக்கென தனி பாணியில் மிரட்டலான ஆக்சன் படங்களை கொடுத்து வரும் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள அதிரடியான படம் தான் கேப்டன் மில்லர். தனுஷுடன் இணைந்து பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடிக்க, சந்தீப் கிஷன் முன்னணி வேடத்தில் நடிக்கிறார். மேலும் கன்னட நடிகர் சிவராஜ்குமார், நிவேதிதா சதீஷ், ஜான் கொக்கென், இளங்கோ குமரவேல், பிரபல ஹாலிவுட் நடிகர் எட்வர்ட் சொன்னேன்பிலிக் ஆகியோர் கேப்டன் மில்லர் படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 1930 -களில் நடைபெறும் கதைக் களத்தை கொண்ட பக்கா அதிரடி பீரியட் ஆக்சன் திரைப்படமாக ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவில் நாகூரான் படத்தொகுப்பு செய்யும் கேப்டன் மில்லர் திரைப் படத்திற்கு ஜீவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

சமீபத்தில் வெளிவந்த கேப்டன் மில்லர் திரைப்படத்தின் டீசர் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் வருகிற டிசம்பர் 15ஆம் தேதி கேப்டன் மில்லர் திரைப்படம் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே கேப்டன் மில்லர் திரைப்படத்திற்கான இறுதி கட்டப் பணிகள் அனைத்தும் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகை நிவேதிதா சதீஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கேப்டன் மில்லர் திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது இயக்குனர் அருண் மாதேஸ்வரன் மற்றும் ஸ்டண்ட் இயக்குனர் திலீப் சுப்பராயன் உடன் இணைந்திருக்கும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு தனது கதாபாத்திரம் குறித்து பகிர்ந்து கொண்டார். அந்தப் பதிவில்,

“ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் தனித்தனியான உணர்வு இருக்கும் என்று நினைக்கிறேன். இது உங்கள் வாழ்க்கையின் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் உங்களுக்கு வரும். நீங்கள் அதனுடன் பழக ஆரம்பிக்கிறீர்கள். இது உங்கள் யதார்த்தத்தை மாற்றுகிறது, இது உங்களை அறியாத பயணத்திற்கு அழைத்துச் செல்கிறது -
அது உங்களை விடுவிக்கும் போது உங்களை பயத்தால் நிரப்புகிறது, அது உங்களைக் கட்டியெழுப்பும்போது உங்களைத் துண்டுகளாக உடைக்கிறது.நீங்கள் உண்மையைத் தேடும் போது அது உங்களை எல்லா வகையான திசைகளிலும் சுழலச் செய்கிறது. இது உங்கள் மீது ஒரு வடுவை ஏற்படுத்துகிறது, ஆனாலும் நீங்கள் பெருமையுடன் வீட்டிற்கு திரும்பி வருகிறீர்கள், இன்னும் அதிகமாக விரும்புகிறீர்கள்! .

அவள் உங்களுக்காக வருகிறாள் - இரத்தம், ஆன்மா மற்றும் ஆவி.

மாஸ்டர்களின் பாணியில் முடிக்கிறேன். நான் எப்போதும் நன்றியோடு இருக்கும் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் மற்றும் ஸ்டண்ட் இயக்குனர் திலீப் சுப்புராயன் எனது உண்மையான இரண்டு தூண்கள். இது உங்களை பெருமைப்படுத்த மட்டுமே!

உங்களது காலண்டரில் தேதியை குறித்துக் கொள்ளுங்கள் கேப்டன் மில்லர் - டிசம்பர் 15.”

என பதிவிட்டு இருக்கிறார். சோசியல் மீடியாவில் வைரலாகும் நடிகை நிவேதிதா சதீஷின் அந்த புகைப்படம் மற்றும் பதிவு இதோ...