தமிழ் சினிமாவின் மிக முக்கிய இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் நெல்சன் தனது கோலமாவு கோகிலா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக களமிறங்கினார் அடுத்தடுத்து சிவகார்த்திகேயனின் டாக்டர் மற்றும் தளபதி விஜயின் பீஸ்ட் ஆகிய படங்களை இயக்கிய நெல்சன் அடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன இணைந்து ஜெயிலர் படத்தை உருவாக்கினார். சூப்பர் ஸ்டாருடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன், தமன்னா, வசந்த் ரவி, யோகி பாபு, மலையாள விநாயகன், மிர்னா மேனன் உட்பட பலர் நடித்துள்ளனர். இதுபோக மலையாள நடிகர் மோகன் லால், கன்னட நடிகர் சிவ ராஜ்குமார், தெலுங்கு நடிகர் சுனில், ஹிந்தி நடிகர் ஜாக்கி ஷெராஃப் ஆகியோரும் இணைந்து நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் ஜெயிலர் திரைப்படத்திற்கு விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவில், நிர்மல் படத்தொகுப்பு செய்ய, அனிருத் இசையமைத்துள்ளார். கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸான ஜெயிலர் படம் ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்று மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது.

தனக்கென தனி பாணியில் டார்க் காமெடி மற்றும் ஆக்சன் கலந்து பக்கா என்டர்டெய்னிங்கான படங்களை கொடுத்து வரும் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் வந்த முதல் இரண்டு படங்களான கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் ஆகிய திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அடுத்து வெளிவந்த பீஸ்ட் திரைப்படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வசூல் ரீதியில் வெற்றி பெற்ற போதும் சில எதிர்மறை விமர்சனங்களின் காரணத்தினால் ட்ரோல் செய்யப்பட்டது. இந்த அத்தனை எதிர்மறை விமர்சனங்கள் & ட்ரோல்ல்களுக்கும் ஜெயிலர் படம் அதிரடி பதிலடியாக மக்களால் கொண்டாடப்படுகிறது. முன்னதாக கடந்த சில மாதங்களாகவே சமூக வலைதளங்களில் இயக்குனர் நெல்சனும் அதிகமாக ட்ரோல் செய்யப்பட்டார். மேலும் சில விழாக்களில் இயக்குனர் நெல்சன் அவமதிக்கப்பட்டதாகவும் செய்திகள் பரவி வந்தன. இந்த நிலையில் நமது கலாட்டா தமிழ் சேனலுக்கு பிறகு பேட்டி கொடுக்க இயக்குனர் நெல்சன் இது தொடர்பாக பதில் அளித்தார். அப்படி பேசுகையில்,

"நம்ம வெற்றி தோல்வி வைத்துதான் நம்மோட அடுத்த கட்ட நடவடிக்கை இருக்கும். ஒரு விஷயம் தப்பா இருக்குனா அதை எப்படி சரி செய்யனும்னு பாக்கனும். தொடர்ந்து வெற்றியவே கொடுத்துட முடியாது. அப்படி கொடுத்தா அதுல எதுவும் பெரிய விஷயம் இல்ல.. இந்த துறையில் பொறுத்தவரை எதாவது தப்பா ஆயிடுச்சுனா அதுவும் தனி ரீச் இருக்கும்.. நல்லாத ஆச்சுனா அதுவும் தனி ரீச் இருக்கும்.. அதை சரியா கொண்டு போகனும்.. எதையும் தனிப்பட்ட முறையில எடுத்துக்க கூடாது... ரசிகர்களுக்காக தான் படமே பன்றோம். அவங்களுக்கு எதிரா நாம என்ன பண்ண போறோம். அவங்களுக்கு என்ற தேவையோ அதையே கொடுப்போம்.. " என்றார் இயக்குனர் நெல்சன். ". நான் எப்பவும் போல எப்படி இருக்கேனோ அப்படிதான் இருக்கேன். நம்மளோட சமநிலை போயிடுச்சுனா எல்லாமே போயிடும்.. நம்ம யோசிக்குறதும் மாறிடும். அதனால் அதையெல்லாம் யோசிக்க வேண்டாம்." "என்ன யாரும் அப்படி தெரிந்தே பண்ண மாட்டாங்க.. நானும் மீடியால இருந்துதான் வந்துருக்கேன்‌.‌ அதனால் இது எப்படி போகும்ன்றது எனக்கு தெரியும்.. எல்லாமே ஒரு தொழில் முறையான பார்வை.. ஒவ்வொருவருத்தருக்கு ஒரு பரப்புரை இருக்கும்.. யாருக்கூடவும் தனிப்பட்ட முறையில் நெருங்கிட கூடாது. அது நல்லதோ கெட்டதோ.. நம்ம வேலை என்னவோ அதை பாக்கலாம். நண்பர்கள், குடும்பங்கள் தான் நம்ம உணர்வுகளை முடிவு செய்யும் விஷயமா இருக்கனும். வேலை என்னிக்கும் நம்மளோட உணர்வுகளை தீர்மானிக்க கூடாது." என்றார் இயக்குனர் நெல்சன். அந்த முழு பேட்டி இதோ…