தமிழ் திரை உலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் விக்னேஷ் சிவன் நடிகர் சிலம்பரசன் TR கதாநாயகனாக நடித்த போடா போடி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர். தொடர்ந்து மக்கள் செல்வன் விஜய் சேதுபதி-நயன்தாரா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கிய நானும் ரவுடிதான் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று சூப்பர் ஹிட்டானது.

இதனையடுத்து நடிகர் சூர்யா கதாநாயகனாக நடிக்க தானா சேர்ந்த கூட்டம் படத்தை இயக்கிய விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அடுத்ததாக தயாராகிவருகிறது காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம். மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா இணைந்து நடித்துள்ள காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் வருகிற ஏப்ரல் 28-ஆம் தேதி ரிலீசாக உள்ளது.

இயக்குனராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இணைந்து தங்களது ரவுடி பிக்சர்ஸ் சார்பாக அடுத்தடுத்து நல்ல திரைப்படங்களை தயாரித்து வருகின்றனர். முன்னதாக இவர்களது தயாரிப்பில் வெளிவந்த கூழாங்கல் திரைப்படம் உலக அளவில் பல விருதுகளை வாங்கி குவித்தது.

அடுத்ததாக நயன்தாரா கதாநாயகியாக நடிக்கும் கனெக்ட் மற்றும் பிக் பாஸ் கவின் கதாநாயகனாக நடிக்கும் ஊர்க்குருவி ஆகிய படங்களை தயாரித்து வரும் ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பில் அடுத்ததாக புதிய குஜராத்தி திரைப்படம் தயாராகவுள்ளது.

தேசிய விருது பெற்ற இயக்குனர் மணிஷ் சைனி இயக்கத்தில் பிரபல நடிகை மோனல் கஜ்ஜார் மற்றும் மல்ஹர் தகர் இணைந்து நடிக்கும் ஷுப்யாத்ரா எனும் இந்த புதிய திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இதர அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Happy to announce our first entry into Gujarati Cinema wit their SuperStar #MalharThakar @MalharThakar & @Gajjarmonal directed by national award winner #ManishSaini #ShubhYatra Wil be the first film from @Rowdy_Pictures looking forward to a continuous consistent journey here😇❤️ pic.twitter.com/BuIgy6JwY4

— Vignesh Shivan (@VigneshShivN) February 26, 2022