தென்னிந்திய திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நடிகை நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் நடிகை சமந்தாவுடன் இணைந்து நடித்துள்ள காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம், சமீபத்தில் படப்பிடிப்பு நிறைவடைந்து, இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

தொடர்ந்து மலையாளத்தில் பிரேமம் பட இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் பிருத்விராஜுடன் இணைந்து கோல்ட் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வரும் நயன்தாரா, மோகன் லால் நடித்த லூசிஃபர் படத்தின் ரீமேக்காக தெலுங்கில் மோகன் ராஜா இயக்கத்தில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிக்கும் காட்ஃபாதர் திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.

இதனையடுத்து நடிகை நயன்தாராவின் பிறந்த நாளான இன்று நயன்தாரா கதாநாயகியாக நடிக்கும் அடுத்த புதிய திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. விக்னேஷ் சிவன் & நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பில், இயக்குனர் அஸ்வின் சரவணன் இயக்கும் திரைப்படம் கனெக்ட். நயன்தாராவுடன் இணைந்து சத்தியராஜ் மற்றும் அனுபம் கேர் கனெக்ட் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

முன்னதாக நயன்தாரா நடித்த ஹாரர் படமான மாயா திரைப்படத்தை இயக்கிய அஸ்வின் சரவணன் இயக்கத்தில் அடுத்த ஹாரர் திரைப்படமாக வெளிவர உள்ள கனெக்ட் படத்தில் மணிகண்டன் கிருஷ்ணமாச்சாரி ஒளிப்பதிவு செய்ய, பிரித்வி சந்திரசேகர் இசையமைக்கிறார். கவனத்தை ஈர்க்கும் நயன்தாராவின் கனெக்ட் பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ...

Here’s the announcement you’ve been waiting for! Presenting to you the first look of #Connect on this very special day 🤗😬#HBDNayanthara #Connect #ConnectFirstLook @VigneshShivn @AnupamPKher #Sathyaraj @Ashwin_saravana pic.twitter.com/1Pardgywy8

— Rowdy Pictures Pvt Ltd (@Rowdy_Pictures) November 18, 2021

We’re thrilled to present to you the second look of #Connect featuring Haniya Nafisa 😊#HBDNayanthara #Connect#LadySuperstar @VigneshShivn @AnupamPKher #Sathyaraj @HaniyaNafisa pic.twitter.com/Fpz6YTpRaW

— Rowdy Pictures Pvt Ltd (@Rowdy_Pictures) November 18, 2021