தென்னிந்திய ரசிகர்களினால் கொண்டாடப்படும் நாயகனாக பல ஆண்டுகள் வலம் வரும் நடிகர் நானி. தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகரான இவருக்கு தென்னிந்தியா முழுவதும் ரசிகர் கூட்டம் அதிகம். குறிப்பாக தமிழில். எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அந்த கதாபாத்திரத்திற்கு உயிரோட்டமான நடிப்பை கொடுப்பதாலே ரசிகர்களாலும் திரையுலகினராலும் ‘நேச்சுரல் ஸ்டார்’ என்று அழைக்கப் படுகிறார். இவரது நடிப்பில் முன்னதாக வெளியான ‘டக் ஜகதீஸ்’, ‘ஷ்யாம் சிங்கா ராய்’, ‘அண்டே சுந்தரனிக்கி’ ஆகிய படங்கள் தொடர்ந்து சமீபத்தில் வெளியான ‘தசரா’ வரை கணிசமான வெற்றியை நானிக்கு வழங்கி தொடர் வெற்றி நாயகனாக தற்போது திரையுலகில் இருந்து வருகிறார்.

நானி, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் இயக்குனர் ஸ்ரீகாந்த் ஓடில்லா இயக்கத்தில் பான் இந்திய திரைப்படமாக வெளியான திரைப்படம் தசரா. நிலக்கரி சுரங்கம் கதைகளத்தை கொண்டு காதலை மையாமாக கொண்டு உருவான தசரா திரைப்படம் பக்கா ஆக்ஷன் கமர்ஷியல் திரைப்படமாக அமைந்தது. ரசிகர்களின் ஆரவார கொண்டாட்டத்துடன் நாடு முழுவது வெளியான தசரா திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றாலும் வசூல் அளவில் வெற்றி படமாக அமைந்தது. மாறுபட்ட தோற்றத்தில் அதிரடி நாயகனாக தசரா படத்தில் காட்சியளித்த நானி பெண் குழந்தைக்கு தந்தையாக மாறியுள்ளார்.

இயக்குனர் சௌர்யுவ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘நானி 30 என்று படத்தின் டைட்டிலை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது. அறிவிப்பின் படி நானி 30 படம் ‘ஹாய் நான்னா’ என்று அறிவிக்கப் பட்டுள்ளது. படத்தில் நானி பெண் குழந்தைக்கு அப்பாவாக நடிக்கிறார். மேலும் படத்தில் கதாநாயாகியாக சீதாராமம் பட நாயகி மிருனாள் தாக்கூர் நடிக்கவுள்ளார்.

வைரா என்டர்டேயின்மண்ட் சார்பில் மோகன் செருக்குரி மற்றும் டாக்டர் விஜயேந்திர ரெட்டி டீகலா இணைந்து தயாரிக்கும் ஹாய் நான்னா திரைப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் ஷான் ஜான் வர்கீஸ் ஒளிப்பதிவு செய்ய படத்தொகுப்பு செய்கிறார் பிரவின் ஆந்தனி மேலும் படத்திற்கு ஹஷீம் அப்துல் வஹப் இசையமைக்கின்றார்.

ஹாய் நான்னா படத்திற்கு வெளியிட்டுள்ள சிறப்பு வீடியோவில் நானியின் மகள் கதாநாயாகியை நண்பரென்று அறிமுகப் படுத்த பெருமூச்சு விட்டு நானி கண் கலங்கி அறிமுகம் ஆவது போன்ற வீடியோ வெளியாகியுள்ளது. தற்போது படக்குழு வெளியிட்டுள்ள ஹாய் நான்னா படத்தின் டைட்டில் வீடியோவை ரசிகர்கள் வெகுவாக பகிர்ந்து வைரலாக்கி வருகின்றனர். வரும் டிசம்பர் மாதம் 21ம் தேதியில் ஹாய் நான்னா திரைப்படம் தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் இந்தியில் உலகமெங்கும் பான் இந்திய திரைப்படமாக வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.