தமிழ் திரையுலகில் சிறந்த ஸ்கிரிப்ட்டுகளை தேர்தெடுத்து அதில் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தும் ஹீரோக்களில் ஒருவர் சிபிராஜ். அறிமுக இயக்குநர் அன்பு இயக்கத்தில் இவர் நடித்து வரும் படம் வால்டர். இதில் காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார். சிபிராஜூக்கு ஜோடியாக நடிகை ஷிரின் கான்ச்வாலா நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

11:11 நிறுவனத்தின் சார்பாக இப்படத்தை டாக்டர் பிரபு திலக் தயாரித்து வருகிறார். இதன் முதல் கட்ட படப்பிடிப்பு கும்பகோணத்தில் நடந்து முடிந்துள்ளது. தற்போது இந்தப் படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடிக்கவிருந்த இயக்குனர் கவுதம் மேனன் நடிக்கவில்லை என்ற தகவல் தெரியவந்தது. அவருக்கு பதிலாக நடிகர் மற்றும் ஒளிப்பதிவாளரான நட்டி நட்ராஜ் நடிக்கவுள்ளார் என்ற செய்தி வெளியானது.

நட்டி கடைசியாக சிவகார்த்திகேயன் நடித்த நம்ம வீட்டு பிள்ளை படத்தில் நடித்திருந்தார். விரைவில் இப்படம் குறித்த அப்டேட்டுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.