சாதாரண குடும்பத்தில் இருந்து வந்து இன்று தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக உயர்ந்துள்ளவர் நானி.கடைசியாக இவர் நடித்த வி படம் அமேசான் ப்ரைம்மில் வெளியாகி சுமாரான வரவேற்பை பெற்றிருந்தது.முதல் முறையாக இந்த படத்தில் நெகட்டிவ் வேடத்தில் நடித்து அசத்தி இருந்தார் நானி.

இதனை அடுத்து நானி Tuck ஜெகதீஷ் படத்தில் நடித்திருந்தார் , இதனை தொடர்ந்து Shyam Singha Roy,Ante Sundaraniki உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.டக் ஜெகதீஷ் படம் முதலில் திரையரங்குகளில் வெளியாவதாக இருந்தது,தற்போதுள்ள சூழல் காரணமாக இந்த படம் நேரடியாக அமேசான் ப்ரைம்மில் வெளியாகிறது.

டக் ஜெகதீஷ் படத்தில் ரித்து வர்மா ஹீரோயினாக நடித்துள்ளார்.ஐஸ்வர்யா ராஜேஷ்,ஜெகபதி பாபு,டேனியல் பாலாஜி,நாசர் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.தமன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.ஷிவா நிர்வாணா இந்த படத்தினை இயக்கியுள்ளார்.

இந்த படம் வரும் செப்டம்பர் 10ஆம் தேதி நேரடியாக அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகவுள்ளது.இந்த படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இந்த படத்தின் ரொமான்டிக் ப்ரோமோ ஒன்றை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.இந்த ப்ரோமோ வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Jagadi & Gumma 🤍😊

3 days to go #TuckJagadishOnPrime ,Sept 10th@riturv @aishu_dil @IamJagguBhai @IamThiruveeR @DanielBalaje @Shine_Screens @ShivaNirvana @MusicThaman @GopiSundarOffl @sahisuresh @praveenpudi @sahugarapati7 @harish_peddi
@adityamusic pic.twitter.com/VUk0bSrelq

— Nani (@NameisNani) September 7, 2021