சாதாரண குடும்பத்தில் இருந்து வந்து இன்று தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக உயர்ந்துள்ளவர் நானி.இவர் நடித்த ஷ்யாம் சிங்கா ராய் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இதனை தொடர்ந்து Ante Sundaraniki என்ற படத்தில் நடித்துள்ளார்.இந்த படம் விரைவில் வெளியாகவுள்ளது.தற்போது இந்த படத்தினை அடுத்து இவர் ஹீரோவாக நடிக்கும் படம் குறித்த தகவல் கிடைத்துள்ளது.அறிமுக இயக்குனர் ஸ்ரீகாந்த்துடன் தசரா என்ற படத்தில் இணைவதாக நானி சில மாதங்களுக்கு முன் அறிவித்தார்.

இந்த படத்தின் பூஜை இன்று நடைபெற்றுள்ளது.இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக நடிக்கிறார்.சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.கிராமத்தில் நடப்பது போல இந்த படத்தின் கதைக்களம் உள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது.

இந்த படத்தின் ஷூட்டிங் மார்ச் மாதம் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த படத்தின் பூஜையின் புஷ்பா பட இயக்குனர் சுகுமார் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.இந்த படத்தின் பூஜை புகைப்படங்கள் மற்றும் வீடியோ ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.