தென்னிந்தியாவின் மிக முக்கியமான இயக்குனர்களில் ஒருவரனவர் இயக்குனர் சிவா. ஆரம்பத்தில் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகி சிறந்து விளங்கி கவனம் பெற்றார். அதன் படி தமிழில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான பத்ரி, சார்லி சாப்ளின் ஆகிய படங்களிலும் மற்றும் தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழி படங்களுக்கும் ஒளிப்பதிவாளராக பணியாற்றினார். பின் கடந்த 2008 ம் ஆண்டு தெலுங்கில் வெளியான 'சௌர்யம்' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். தொடர்ந்து தெலுங்கில் சில படங்களை இயக்கிய சிவா. கடந்த 2011 ம் ஆண்டு கார்த்தி நடிப்பில் வெளியான 'சிறுத்தை' படம் மூலம் தமிழில் மாஸ் என்ட்ரி கொடுத்தார். மிகப்பெரிய கமர்ஷியல் ஹிட் திரைப்படமாக சிறுத்தை படம் அவருக்கு வெற்றியை கொடுத்தது. அதன்மூலம் இன்றும் ரசிகர்கள் சிறுத்தை சிவா என்றே அழைத்து வருகின்றனர். தமிழில் நல்ல வரவேற்பை பெற்ற சிறுத்தை சிவா அஜித் குமாருடன் அதிரடி கூட்டணி அமைத்து ‘வீரம்’ திரைப்படத்தை இயக்கினார். மீண்டும் மெகா பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்து தமிழ் சினிமாவின் கவனம் பெற்றார்.

அஜித் குமார் கூட்டணியில் அமைந்த வெற்றியை தொடர்ந்து அவருடைய அடுத்தடுத்த படங்களை இயக்கினார், வேதாளம், விவேகம், விசுவாசம் ஆகிய படங்களை இயக்கி தமிழில் முன்னிலை இயக்குனராக வலம் வந்தார். பின் மீண்டும் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூட்டணியில் ‘அண்ணாத்த’ படத்தை இயக்கினார். படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை என்றாலும் சிறுத்தை சிவா மார்கெட் இன்னும் தமிழ் மற்றும் தெலுங்கு திரைத்துறையில் அதிகரித்து கொண்டே இருந்தது. இதனிடையே சூர்யாவுடன் பிரம்மாண்டமான கதைகளத்தில் இணையவுள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது.

ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில் மிகப்பெரிய பொருட் செலவில் உருவாகி வரும் சூர்யா 42 படத்தின் படப்பிடிப்பை விறுவிறுப்பாக கடந்த சில மாதங்களாக நடைபெற்று கொண்டிருக்கின்றது. முழுக்க முழுக்க 3D தொழில்நுட்பத்தில் உருவாகி வரும் இப்படத்தில் சூர்யா விற்கு கதாநாயகியாக பாலிவுட் நடிகை தீஷா பட்டாணி நடித்து வருகிறார்.

வெற்றி பழனிசாமி ஒளிப்பதிவில், நிஷாத் யூசுப் படத்தொகுப்பு செய்ய, படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார். இந்தியாவின் 10 மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியிடவிருக்கும் சூர்யா 42 படத்தின் டைட்டில் சிறப்பு வீடியோ நாளை காலை 9.05 மணியளவில் வெளியிடவுள்ள நிலையில் படத்தின் ஆடியோ ரைட்ஸ் உரிமம் குறித்து அட்டகாசமான அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி பிரபல ஆடியோ நிறுவனமான சரிகம சூர்யா 42 படத்தின் ஆடியோ ரைட்ஸ் உரிமத்தை அனைத்து மொழியிலும் கைப்பற்றியுள்ளது. இந்த தகவல் இணையத்தில் ரசிகர்களால் வைரலாகி வருகிறது.