தமிழ் சினிமாவின் பிரபல கதாநாயகர்களில் ஒருவரான மிர்ச்சி சிவா இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் வெளிவந்த சென்னை 600028 திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார். தொடர்ந்து சிவா நடித்த தமிழ் படம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.
இதனையடுத்து இயக்குனர் சுந்தர்.சி-யின் கலகலப்பு, இயக்குனர் கிருத்திகா உதயநிதியின் வணக்கம் சென்னை உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து வந்த சிவா நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் தமிழ் படம் 2. மேலும் 1970களில் சூப்பர் ஹிட்டான காசேதான் கடவுளடா படத்தின் ரீமேக் படத்திலும் சிவா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில் விஜய் தொலைக்காட்சியின் லொள்ளுசபா நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமடைந்த இயக்குனர் ராம்பாலா தில்லுக்குதுட்டு போன்ற ஹாரர் காமெடி திரைப்படங்களை இயக்கியுள்ளார். அடுத்ததாக இயக்குனர் ராம்பாலா இயக்கத்தில் மிர்ச்சி சிவா நடித்த இடியட் படத்தின் ரிலீஸ் குறித்த சிறப்பு தகவல் இன்று வெளியானது.
நடிகர் சிவாவுடன் இணைந்து நிக்கி கல்ராணி , ஊர்வசி உள்ளிட்டோர் நடித்துள்ள இடியட் திரைப்படத்தை ஸ்கிரீன் சீன் நிறுவனம் தயாரித்துள்ளது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இடியட் திரைப்படம் இம்மாதம் (செப்டம்பர்) 17ஆம் தேதி தியேட்டரில் வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
#IDIOT - All set for SEPTEMBER release..
— Ramesh Bala (@rameshlaus) September 3, 2021
ini than aarambam 🤘
Haunting begins 👻👻👻
TN release by @7GFilmsSiva@BhalaRb @actorshiva @nikkigalrani @Screensceneoffl @iAksharaGowda @sidd_rao @skiran_kumar @onlynikil @RIAZtheboss @CtcMediaboy pic.twitter.com/wK0XTBbde3