நமது கலாட்டா தமிழ் சேனலில் நடைபெற்ற நடிகரும் இயக்குனருமான எஸ்.ஜே.சூர்யா அவர்களின் ரசிகர்கள் கொண்டாட்டம் நிகழ்வில் கலந்து கொண்ட பிரபல நடிகர் மாரிமுத்து அவர்கள் எஸ்.ஜே.சூர்யாவும் அவரும் உதவி இயக்குனர்களாக இயக்குனர் வசந்த் அவர்களிடம் பணியாற்றிய போது ஆசை மற்றும் நேருக்கு நேர் ஆகிய படங்களின் படப்பிடிப்பின் போது நடந்த கலகலப்பான நினைவுகளை பகிர்ந்து கொண்டார். முன்னதாக மான்ஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் எஸ்.ஜே.சூர்யா - பிரியா பிரியா பவானி சங்கர் நடிக்க, இயக்குனர் ராதா மோகன் இயக்கத்தில் உருவாகி நீண்ட காலமாக ரிலீஸுக்காக காத்திருக்கும் பொம்மை திரைப்படம் வருகிற ஜூன் 16ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது. தொடர்ந்து மார்க் ஆண்டனி, கேம் சேஞ்சர், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் என எஸ்.ஜே.சூர்யா அவர்கள் நடிப்பில் அடுத்தடுத்து வரிசையாக அட்டகாசமான படங்கள் தயாராகி வருகின்றன.

இதனிடையே, நமது கலாட்டா தமிழ் சேனலில் நடைபெற்ற எஸ்.ஜே.சூர்யா ரசிகர்கள் கொண்டாட்டம் நிகழ்ச்சியில் எஸ்.ஜே.சூர்யா உடன் இணைந்து இயக்குனர் வசந்த் அவர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவரும் தற்போது சின்ன திரையில் பிரபல நடிகராக வலம் வருபவருமான மாரிமுத்து அவர்கள் இந்த விழாவில் கலந்துகொண்டு எஸ்.ஜே.சூர்யா அவர்கள் குறித்து மனம் திறந்து பேசினார். அந்த வகையில் எஸ்.ஜே.சூர்யா கேட்டதற்காக இயக்குனர் வசந்த் உடன் பணியாற்றிய ஒரு முக்கிய அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். அப்படி பேசுகையில்,

“ஆசை படம் எல்லோரும் பார்த்திருப்பீர்கள் என நினைக்கிறேன். அதில் ஒரு பாட்டியம்மா நடித்திருந்தார்கள். வசந்த் சாருக்கு பொதுவாகவே பார்த்தீர்கள் என்றால் இந்த முகங்கள் மிகப் பிடிக்கும். அது மாதிரி, “எனக்கு கொஞ்சம் முகங்கள் வேண்டும் ஒரு நான்கு முகங்களை காட்டுங்களேன்” என கேட்டார். அப்படி ஒரு அம்மா ஆசை படத்தில் வந்து நடித்துவிட்டு சென்று விட்டார். அவர்கள் ஒரு ஆங்கிலோ இந்தியன் பெண்மணி வயதானவர். அந்த படத்தில் அவர் நடிக்கும் போதே அவருக்கு 75 வயது இருக்கும். அந்த காட்சிக்கு பெயர் “பிந்தி சீன்” என சொல்வோம். ஆசை படத்தில் பஸ் ஸ்டாப்பில் அஜித்குமார், சுப்புலட்சுமியை பார்ப்பதற்காக நின்று கொண்டிருப்பார் பஸ் வரும் சுப்புலட்சுமி அமர்ந்திருப்பார். ஆனால் அவர் அஜித் குமாரை பார்க்க மாட்டார். அஜித்குமார் அருகில் இருக்கும் அந்த வயதான பெண்மணியை கூப்பிட்டு அந்த பொட்டு வைத்த பெண்ணை என்னை பார்க்க சொல்லுங்கள் என கேட்பார். அப்போது அந்தப் பெண்மணி கூப்பிடுவார், அவர் கூப்பிடும் போது பஸ் கிளம்பி சென்று விடும். அந்த பாட்டி தான். அந்தப் படம் முடித்து அதை ரிலீஸ் ஆகிவிட்டது அதன் பிறகு 2 1/2 ஆண்டுகள் கழித்து மீண்டும் நேருக்கு நேர் படம் ஆரம்பிக்கிறோம். அப்போது ஏதோ ஒரு சீனுக்கு "நீங்கள்தான் அந்த முகங்கள் எல்லாம் கொண்டு வருவீர்கள்... எனக்கு அந்த பாட்டி வேண்டும் அந்த பிந்பிந்தி ல் நடித்த பாட்டி வேண்டும்" என கேட்டார். அவர்கள் எங்கோ சௌகார்பேட்டை பகுதியில் இருந்து வந்தவர்கள். என்னடா இது இப்போது போய் அந்த கிழவியை கூட்டி வர சொல்கிறாரே அதை எங்கே போய் தேடுவது என இருந்தேன். எனக்கு ஆட்டோவில் போவதற்கெல்லாம் காசு கொடுத்தார்கள் அதை எல்லாம் வாங்கி பாக்கெட்டில் போட்டுக் கொண்டு வீட்டுக்கு சென்று விட்டேன். வீட்டுக்கு போய் சாப்பிட்டுவிட்டு படுத்து தூங்கி விட்டேன் எதைப் பற்றியும் கவலைப்படவில்லை. பின் மாலை 5 மணி அளவில் மீண்டும் ஆபீஸுக்கு சென்றேன். “அந்தக் கிழவி என்ன ஆச்சு?” என கேட்டார். அந்தக் கிழவி இறந்து விட்டார்கள் சார் என்ன சொல்லிவிட்டேன். அவரும், “அப்படியா ஆமாம் அப்போதே அவர் கொஞ்சம் வயதானவர் அல்லவா சரி விட்ருங்க” என சொல்லிவிட்டார். அடுத்த நாள் காலையில் பெசன்ட் நகர் பீச்சில் படப்பிடிப்பு. பொதுவான கூட்டத்தில் நிற்க கொஞ்சம் ஆங்கிலோ இந்தியன் கிரவுட் சொல்லியிருந்தோம். அந்தக் கூட்டத்தில் இருக்கும் யாரையும் அவரும் கவனிக்கவில்லை நானும் கவனிக்கவில்லை. காலையில் உணவு இடைவேளையின் போது, அவர் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது அந்த கிழவி அவரை நோக்கி வருகிறது. அந்த 30 பேர் கொண்ட கிரவுடில் அந்த கிழவியும் வந்திருக்கிறது. அதை காலையிலேயே நான் பார்த்திருந்தேன் என்றால் அதை கடத்தி இருப்பேன். எங்கேயாவது கொண்டு போய் கடலில் போட்டிருப்பேன். நானும் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன் அவரும் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார் நேராக போகிறது. அந்தக் கிழவிக்கு என்னவென்றால் போன படம் நடித்த இயக்குனர் அவருக்கு வணக்கம் சொல்ல வேண்டும் என போய்க் கொண்டிருக்கிறது. போய் சாப்பிட்டு கொண்டு இருப்பவரிடம் “குட் மார்னிங்” என சொன்ன அந்தக் கிழவியை சார் உற்றுப் பார்த்தார் தொடர்ந்து அவரிடம், “என்னை ஞாபகம் இருக்கிறதா? உங்களது கடைசி படத்தில் பிந்தி சீனில் நடித்தேன்” என சொல்கிறது. அதன் பிறகு இயக்குனர் சாப்பிடவில்லை. என்னை கூப்பிட்டார்... “என்னங்க இது… நானும் பொய் சொல்லி இருக்கிறேன் கே.பி சாரிடம் பொய் சொல்லி இருக்கிறேன்... பொய் சொல்லக்கூடிய சூழ்நிலை ஒரு மனிதனுக்கு வரும் ஒரு அசிஸ்டன்ட் டைரக்டருக்கு வரத்தான் செய்யும். அதற்காக ஒரு ஆள் செத்துப் போயிட்டார் என எப்படிங்க பொய் சொல்வது” ரொம்ப பரிதாபமாக கேட்டார். நான் “இல்லை சார்” என பதில் சொல்லப் போனேன், “இல்ல இல்ல அந்த கிழவி செத்தே போய்விட்டது என வைத்துக் கொள்வோம். இப்போது வந்தது வேற கிழவி என்ன நினைத்துக் கொள்கிறேன் நீங்களும் பணியாற்ற வேண்டும் நானும் பணியாற்ற வேண்டும் சரிதானே அந்த கிழவி செத்துப் போனதாகவே விட்டு விடுங்கள் போய் வேலையை பார்ப்போம் போய் சாப்பிடுங்க... போங்க…” என்றார்"

மாரிமுத்து அவர்களின் இந்த கலகலப்பான பேச்சு ஒட்டுமொத்த அரங்கையும் சிரிப்பொலியால் நிறைய வைத்தது. கலகலப்பான அந்த முழு வீடியோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்.