இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வைகைப்புயல் வடிவேலு, ஃபகத் ஃபாஸில் மற்றும் கீர்த்தி சுரேஷ் இணைந்து நடித்திருக்கும் மாமன்னன் திரைப்படம் தற்போது திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் நமது கலாட்டா தமிழ் சேனலில் நடைபெற்ற சிறப்பு நேர்காணலில் நடிகையும் இயக்குனருமான சுகாசினி மணிரத்தினம் அவர்களோடு கலந்துரையாடிய இயக்குனர் மாரி செல்வராஜ் மற்றும் உதயநிதி ஸ்டாலின் இருவரும் பல முக்கியமான விஷயங்களை பகிர்ந்து கொண்டனர்.

அந்த வகையில் இயக்குனர் மாரி செல்வராஜ் அவர்களிடம், "உங்களது வாழ்க்கையில் மாமன்னன் யார்?" எனக் கேட்டபோது, "அப்பா..! அவர் மிகவும் அப்பாவி. எதுவுமே இல்லாமல் அவரிடம் எதுவுமே இல்லை என்பது எனக்கு நன்றாக தெரியும் அவர் துயரப்பட்ட நாட்களை தான் நான் அதிகம் பார்த்திருக்கிறேன். நான் பள்ளிக்கூடத்தில், கல்லூரிகளில் படிக்கும் சமயங்களிலும் அப்பா எங்கையாவது கூலி வேலை தான் பார்த்துக் கொண்டிருப்பார். அதை கடந்து தான் நான் போவேன். நான் பரியேறும் பெருமாள் படம் பண்ணும் வரையிலும் அவர் அவரது கையில் எடுத்த மண்வெட்டியை கீழே வைக்கவில்லை. அதுவரைக்குமே அவர் கூலி வேலைக்கு சென்று கொண்டு தான் இருந்தார் எனக்கு அப்போதெல்லாம் தோன்றும் நிறைய இடங்களில் நானே தவறும் செய்திருக்கிறேன். எனது அப்பா என்ன சொல்வதற்கே சில இடங்களில் நான் மௌனமாக போயிருக்கிறேன். அதை பரியேறும் பெருமாள் படத்தில் வைத்திருப்பேன் அப்பாவை மாற்றி மாற்றி சொல்லி இருப்பான் என்றால் என் அப்பா எங்க வேலை பார்த்துக் கொண்டிருப்பார் நான் அதை பார்த்துக் கொண்டே போவேன். என்னோடு படிக்கும் பசங்களுடைய வீட்டில் வயலில் வேலை பார்த்துக் கொண்டிருப்பார். அவர்கள் அவரைப் பெயர் சொல்லிக் கூப்பிடுவார்கள். இதெல்லாம் இருந்தும் கூட என்னால் இப்போதும் நம்ப முடியவில்லை நான் இப்போது ஒரு இயக்குனராக இருக்கிறேன். எங்கள் அண்ணன் ஒருவர் தாசில்தாராக இருக்கிறார். இன்னொரு அண்ணன் அரசு பள்ளியில் ஆசிரியராக இருக்கிறார் ஒரு அக்கா முன்னணி வங்கியில் பணியாற்றுகிறார் இன்னும் சொல்லப்போனால் ஒரு 500 ரூபாய்க்காக வட்டி கட்ட முடியாமல் ஒரு வயலையே கொடுத்திருக்கிறார்கள். எப்போதோ வாங்கிய ஒரு 500 ரூபாய்க்காக ஒரு வயலையே கொடுத்திருக்கிறார்கள் நிலமோ எதுவுமே இல்லை இதெல்லாம் பெரிய விஷயம் நான் இப்போது மாமன்னன் படம் பண்ணுகிறேன். மாமன்னன் படத்தின் கதை அதனுடைய தாக்கத்தில் வந்ததுதான்." என்றார். தொடர்ந்து அவரிடம் "அப்பாவிடம் சொல்லி இருக்கிறீர்களா நீங்கள் தான் மாமன்னன் என்று" எனக் கேட்டபோது, “அவர்தான் மாமன்னன்.. அப்பா பெயர் செல்வராஜ் நான் வெறும் மாரி செல்வம் தான் அப்பா பெயரை சேர்த்து தான் மாரி செல்வராஜ் என வைத்துக் கொண்டேன். பரியேறும் பெருமாள் திரைப்படத்தில் அந்த அப்பா கேரக்டரை வடிவமைத்துவிட்டு இதற்கு என்ன பெயர் வைக்கலாம் என யோசித்தபோது, அது எனக்கு மட்டும்தான் புரியும் அந்த எமோஷன் எனவே நேரடியாக எனது அப்பா பெயர் வைத்தேன். புலியங்குளம் செல்வராஜ் என்று அந்த கதாபாத்திரத்திற்கு பெயரை வைத்து விட்டேன். எங்க அப்பாவுடைய கொஞ்சம் ஏரியா அந்த படத்தில் இருக்கும். அடுத்து கர்ணன் திரைப்படத்தில் என் அப்பாவின் ஆதிக்கம் இல்லாமல் அந்த படமும் இல்லை. பரியேறும் பெருமாள் படத்தில் ஒரு அப்பா இருப்பார் அதுவும் அவர்தான் அடுத்த கர்ணனில் சாமி கும்பிட்டுக் கொண்டே இருப்பார் மௌனமாகவே இருப்பார் கல்யாண வயதில் ஒரு பெண் இருக்கிறாளே என்ன செய்யப் போகிறோம் என்று அதற்குள் நான் பார்த்ததை அப்படியே வைத்தேன். இப்போது மாமன்னன் படத்திலுமே அவருடைய தாக்கம் தான் அதிகமாக இருக்கும். அவருக்கும் எனக்கும் இருக்கும் அந்த சின்ன விஷயம் தான் மாமன்னன், இவ்வளவு பெரிய தளத்திற்கு வடிவமானது. நான் சாரிடமும் (உதயநிதி ஸ்டாலின்) சொன்னேன். சார் இது நிஜம் இதை நான் கொஞ்சம் விரிவு படுதியிருக்கிறேன் இது முழுக்க முழுக்க அவர்தான் காரணம் இந்த கதைக்கு என சொல்லி இருந்தேன். இந்த மூன்று படங்கள் மட்டுமல்ல என்னுடைய எல்லா படங்களிலும் அவர் இருப்பார்” என இயக்குனர் மாரி செல்வராஜ் பதிலளித்திருக்கிறார் இன்னும் பல சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்து கொண்ட இயக்குனர் மாரி செல்வராஜ் உதயநிதி ஸ்டாலின் அந்த முழு பேட்டியை கீழே உள்ள லிங்கில் காணலாம்.