முதல்முறையாக ஜெய் பீம் படத்தின் இயக்குனர் TJ.ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கதையின் நாயகனாக நடிக்க இருக்கும் தலைவர் 170 திரைப்படத்தின் கதாநாயகிகள் குறித்த அறிவிப்பு வெளியானது. ஒட்டுமொத்த இந்திய சினிமாவிற்கும் சூப்பர் ஸ்டாராக வழங்கும் ரஜினிகாந்த் அவர்கள் கிட்டத்தட்ட தனது திரைப்பயணத்தில் 47 ஆண்டுகள் கடந்த போதும் தனது வயதில் 70-களை தொட்ட போதும் இன்னும் குறையாத அதே வேகத்தோடு கதையின் நாயகனாக தனது ஸ்டைலான நடிப்பால் ரசிகர்களை கவருவதோடு பாக்ஸ் ஆபிஸிலும் மன்னனாக திகழ்கிறார். அந்த வகையில் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் கடந்த ஆகஸ்ட் மாதம் வெளிவந்து ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்பை பெற்றதோடு பாக்ஸ் ஆபிஸின் 600 கோடிகளுக்கு மேல் வசூல் விட்டு தமிழ் சினிமாவின் இண்டஸ்ட்ரி ஹிட்டாக மிகப்பெரிய சாதனை படைத்தது.

இதைத்தொடர்ந்து தனது மகளும் இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லால் சலாம் திரைப்படத்தில் மொய்தின் பாய் எனும் மிக முக்கிய கவுரவ வேடத்தில் ரஜினிகாந்த் நடித்திருக்கிறார். கிரிக்கெட்டை மையப்படுத்திய ஸ்போர்ட்ஸ் படமாக விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க வெளிவர இருக்கும் இந்த லால் சலாம் திரைப்படம் வருகிற 2024 ஆம் ஆண்டு பொங்கல் வெளியீடாக ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூட்டணி தலைவர் 171 படத்தில் இணைகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு தலைவர் 171 திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்த நிலையில் தளபதி விஜயின் லியோ திரைப்படத்தில் ரிலீசுக்கு பிறகு இதர அறிவிப்புகள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது 170 வது திரைப்படமாக உருவாகும் தலைவர் 170 திரைப்படத்தில் நடிக்கிறார். இந்த தலைவர் 170 திரைப்படத்தை நடிகர் சூர்யா நடிப்பில் வெளிவந்து மிகப்பெரிய பாராட்டுகளைப் பெற்ற ஜெய் பீம் திரைப்படத்தின் இயக்குனர் TJ.ஞானவேல் எழுதி இயக்குகிறார் இந்த திரைப்படமும் ஜெய் பீம் போலவே ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கப்படுவதாக தகவல்கள் வெளிவந்திருக்கின்றன. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் படப்பிடிப்பு தொடங்கிய பிறகு வெளியாகும் என தெரிகிறது. அடுத்த ஓரிரு தினங்களில் பூஜை உடன் தலைவர் 170 திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக தெரிகிறது. பேட்ட, தர்பார் மற்றும் ஜெயிலர் படங்களை தொடர்ந்து 4வது முறையாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் தலைவர் 170 படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார்.

இதனிடையே “தலைவர் 170 ஸ்குவாட்” என்ற பெயரில் இப்படத்தில் பணியாற்றும் படக்குழுவினர் குறித்த அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது தலைவர் 170 திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுடன் இணைந்து முதல் முறையாக நடிகை மஞ்சு வாரியர் கதையின் நாயகியாக நடிக்கிறார். மேலும் சார்பட்டா பரம்பரை படத்தில் கதாநாயகியாக நடித்த நடிகை துஷாரா விஜயன் மற்றும் இறுதி சுற்று ஓ மை கடவுளே உள்ளிட்ட படங்களில் ரசிகர்களை கவர்ந்த நடிகை ரித்திகா சிங் ஆகியோரும் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர் என தற்போது அதிகாரப்பூர்வமாய் அறிவிக்கப்பட்டுள்ளது. இதர அறிவிப்புகள் அடுத்தடுத்த தினங்களில் வரிசையாக வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Welcoming the bold performer 🤨 Ms. Ritika Singh ✨ on board for #Thalaivar170🕴🏼#Thalaivar170Team has gotten grittier 💪🏻 with the addition of @ritika_offl 🎬🤗🌟@rajinikanth @tjgnan @anirudhofficial @officialdushara @RIAZtheboss @V4umedia_ @gkmtamilkumaran @LycaProductionspic.twitter.com/QN3AWAhOd7

— Lyca Productions (@LycaProductions) October 2, 2023

Welcoming the talented actress Ms. Dushara Vijayan ✨ on board for #Thalaivar170🕴🏼#Thalaivar170Team has gotten stronger with the addition of the wonderful @officialdushara 🎬🤗🌟@rajinikanth @tjgnan @anirudhofficial @RIAZtheboss @V4umedia_ @gkmtamilkumaran @LycaProductionspic.twitter.com/s1dXzNpGBr

— Lyca Productions (@LycaProductions) October 2, 2023