தமிழ் சினிமாவில் முன்னணி ஜாம்பவான்கள் முயற்சி செய்து முடியாமல் கைவிடப்பட்டு கடைசியில் ஆகச் சிறந்த இயக்குனரான மணிரத்னத்தின் கடின உழைப்பால் அமரர் கல்கியின் அற்புதப் படைப்பான பொன்னியின் செல்வன் நாவல் தற்போது திரைப்படமாக வெளிவந்துள்ளது. லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரித்துள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தை தயாரித்துள்ளன.

பொன்னியின் செல்வனின் முன்னணி கதாபாத்திரங்களில் ஆதித்த கரிகாலனாக சீயான் விக்ரம், அருண்மொழி வர்மன் எனும் பொன்னியின் செல்வனாக ஜெயம் ரவி, வல்லவரையன் வந்தியத்தேவனாக கார்த்தி, குந்தவையாக த்ரிஷா, நந்தினி மற்றும் மந்தாகினி என இரட்டை வேடத்தில் ஐஸ்வர்யா ராய், பெரிய மற்றும் சிறிய பழுவேட்டரையர்களாக சரத்குமார் மற்றும் பார்த்திபன், சுந்தரசோழராக பிரகாஷ்ராஜ், கொடும்பாளூர் வேளாளர் பூதி விக்ரம கேசரியாக இளைய திலகம் பிரபு, பார்த்திபேந்திர பல்லவனாக விக்ரம் பிரபு, மதுராந்தகராக ரஹ்மான், பூங்குழலியாக ஐஸ்வர்யா லெக்ஷ்மி உள்ளிட்ட மிகப் பெரிய நடிகர்கள் பட்டாளமே நடித்துள்ளனர்.

மேலும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் பாண்டியர்களின் ஆபத்துதவிகளாக, வில்லன்களாக வரும் ரவிதாசன், சோம்பன் சாம்பவன், தேவராளன் என்கிற பரமேஸ்வரன், வரகுணன் ஆகிய கதாபாத்திரங்களில் கிஷோர், ரியாஸ்கான், வினய் மற்றும் அர்ஜுன் சிதம்பரம் ஆகியோர் நடித்துள்ளனர்.

எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் வசனங்களில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்துள்ளார். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் தனது பின்னணி இசையாலும் பாடல்களாலும் படத்தை மேலும் மெருகேற்றியுள்ளார். அந்தவகையில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ராட்சஸ மாமனே வீடியோ பாடல் தற்போது வெளியானது. அட்டகாசமான அந்த வீடியோ பாடல் இதோ…