உலகப் புகழ்பெற்ற நாவல்களில் ஒன்றாக போற்றப்படும் அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் மிகச் சிறந்த வரலாற்று புனைவு நாவல்களில் ஒன்று. இந்த அற்புத படைப்பை திரை வடிவமாகஅக எத்தனையோ பேர் முயற்சி செய்தும் முடியாத நிலையில் தனது விடாமுயற்சியால் கனவு படைப்பான பொன்னியின் செல்வன் திரைப்படத்தை நனவாக்கி இருக்கிறார் இயக்குனர் மணிரத்னம். தனது இத்தனை ஆண்டு கால திரை பயணத்தின் விஸ்வரூபமாகவும் தனது திரைப்படங்களிலேயே மணிமகுடமாகவும் விளங்கும் வகையில் இரண்டு பாகங்களாக உருவாக்கி இருக்கும் இந்த பொன்னியின் செல்வன் திரைப்படத்தை இயக்குனர் மணிரத்னம் செதுக்கியிருக்கிறார். மிகவும் சிக்கலான கல்கியின் இந்தப் பெரும் கதையை இரண்டரை மணி நேர படத்திற்குள் அடங்கும் வகையில் இரண்டு பாகங்களாக மாற்ற தேர்ந்த திரைக்கதை தேவைப்படுகிறது. அந்த வகையில் இயக்குனர் மணிரத்தினம் எழுத்தாளர் ஜெயமோகன் மற்றும் இளங்கோ குமரவேல் ஆகியோர் ஒன்றிணைந்து இந்த அசாத்திய படைப்பிற்கான சரியான திரைக்கதையை அமைத்தனர்.

அத்தனை பெரிய பிரம்மிப்பை மக்களின் கண் முன் நிறுத்தும் வகையில் தோட்டா தரணியின் கலை இயக்கமும், ரவிவர்மனின் ஒளிப்பதிவும் மாயாஜாலங்கள் நிகழ்த்த ஸ்ரீகர் பிரசாத்தின் கனக்கச்சிதமான படத்தொகுப்பும் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் பிரம்மாண்ட இசையும் ரசிகர்களுக்கு திரையரங்குகளில் படத்தை கொண்டாடும் வகையில் சிறந்த அனுபவத்தை கொடுத்தது. கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெளிவந்த பொன்னியின் செல்வன் பாகம் ஒன்று திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை மற்றும் பிளாக் பாஸ்டர் ஹிட் ஆனது. இதன் தொடர்ச்சியாக பொன்னியின் செல்வன் பாகம் இரண்டு திரைப்படத்திற்காக ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்த நிலையில், ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட வருகிற ஏப்ரல் 28ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது.

கல்கியின் ஆகச்சிறந்த படைப்புகளில் ஒன்றாக விளங்கும் பொன்னியின் செல்வனின் மிக முக்கிய கதாபாத்திரங்களான ஆதித்த கரிகாலன், பொன்னியின் செல்வன் என்கிற அருள் மொழி வர்மன், வல்லவரையன் வந்தியத்தேவன், நந்தினி & ஊமைராணி, குந்தவை, ஆழ்வார்கடியான் நம்பி, பூங்குழலி, பெரிய பழுவேட்டறையர், சிறிய பழுவேட்டறையர், சுந்தர சோழர், பார்த்திபேந்திர பல்லவன், பெரிய வேளாளர் பூதி விக்ரம கேஸரி, வானதி, மதுராந்தகன், சேந்தன் அமுதன், ரவிதாசன், திருக்கோவிலூர் மலையமான், செம்பியன் மாதேவி, அனிருத்த பிரம்மராயர், வீரபாண்டியன் உள்ளிட்ட பொன்னியின் செல்வனின் மிக முக்கிய கதாபாத்திரங்களில் சீயான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, இரட்டை வேடத்தில் ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஜெயராம், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், விக்ரம் பிரபு, இளைய திலகம் பிரபு, ஷோபிதா, ரஹ்மான், அஸ்வின் கக்கமன்னு, கிஷோர், லால், ஜெயசித்ரா, மோகன் ராமன், நாசர் ஆகியோர் நடித்துள்ளனர்.

முன்னதாக இன்று மார்ச் 29ஆம் தேதி பொன்னியின் செல்வன் 2 படத்தின் பிரம்மாண்ட இசை & ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெறுகிறது. இதனை தெரிவிக்கும் வகையில் அதிரடியான புதிய போஸ்டர் ஒன்று தற்போது வெளியாகி உள்ளது. ஏற்கனவே பொன்னியின் செல்வன் பாகம் 1 திரைப்படத்திற்கு வெளியிட்ட போஸ்டரில் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களாக விளங்கும் 15 கதாபாத்திரங்களுக்கும் மேல் இருக்கும் போஸ்டர் வெளியிடப்பட்ட நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் பொன்னியின் செல்வன் 2 புதிய போஸ்டரில் மிக முக்கியமான ஆறு கதாப்பாத்திரங்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளன. கதைப்படி ஆதித்த கரிகாலன் மர்மமான முறையில் கொல்லப்படுகிறார். தொடர்ந்து சில மிக முக்கிய கதாபாத்திரங்கள் உயிரிழப்பதோடு கதை முடிவடையும். எனவே இந்தப் பேரிழப்பை குறிப்பிடும் வகையில் பொன்னியின் செல்வன் 2 படத்தின் போஸ்டரை வடிவமைத்திருக்கிறார்களா என ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தோடு இந்த போஸ்ட்ரை பகிர்ந்து வருகின்றனர். சோசியல் மீடியாவில் வைரலாகும் அந்த புதிய போஸ்டர் இதோ…