ஒட்டுமொத்த சினிமா ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருப்பது பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்திற்காக தான். லைகா ப்ரொடக்ஷன்ஸ் & மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து வழங்க இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகும் பொன்னியின் செல்வன் படம் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட வருகிற ஏப்ரல் 28ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. இதனிடையே இயக்குனர் மணிரத்தினம் மற்றும் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இருவரும் நமது கலாட்டா பிளஸ் சேனலில் திரு.பரத்வாஜ் ரங்கன் அவர்களோடு சிறப்பு நேர்காணலில் பேசியபோது பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டனர். அந்த வகையில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் உடனான முதல் சந்திப்பு குறித்து இயக்குனர் மணிரத்னம் அவர்கள் மனம் திறந்து பேசினார். அப்படி பேசுகையில்,

“ரோஜா படத்திற்கு முன்பு ஒரு முறை அவரை(ஏ.ஆர்.ரஹ்மான்) சந்தித்தேன். அவருடைய ஸ்டூடியோவிற்கு சென்றிருந்தேன். அவர் ஏற்கனவே ரெகார்ட் செய்து வைத்த சிலவற்றை எனக்கு காட்டினார். சில டேப்களை எடுத்து போட்டு காட்டினார். அந்த இசையின் சத்தங்கள் நம்ப முடியாதவை. அவை அனைத்தும் மனயை மயக்கும்படியாக இருந்தன. பின்னர் அவரிடம் எனக்காக ஒரு DEMO டேப் கொடுக்க முடியுமா? என கேட்டேன். அவர் சில விஷயங்களை சேர்த்து ஒரு டேப்பில் போட்டு எனக்கு கொடுத்தார். அவை அனைத்தும் அட்டகாசமாக இருந்தன. ரோஜா திரைப்படத்தை உறுதி செய்த பிறகு மீண்டும் அவரிடம் சென்றேன். பின்னர் அவர் அதற்காக இசையமைக்க ஆரம்பித்தார். என இயக்குனர் மணிரத்னம் தெரிவித்தார்.

தொடர்ந்து அவரிடம் ஏ.ஆர்.ரஹ்மானோடு ரோஜா படத்தில் பணியாற்றும் போது அவரிடம் எப்படி கதையை சொன்னீர்கள் முழு கதையையும் சொல்லி விட்டீர்களா அல்லது அல்லது ஒரு SITUATION-ஐ சொன்னீர்களா? எனக் கேட்டபோது, "நான் அந்த திரைப்படத்தின் மொத்த ஐடியாவை அவரிடம் சொல்ல வேண்டும். அதுவரை நான் இளையராஜா அவர்களோடு பணியாற்றி இருந்தேன். இளையராஜா உடன் பணியாற்றும் போது நமக்கு குறைவான இடம் தான் கிடைக்கும். அதற்குள் நமக்கு என்ன வேண்டும் என்பதை மிகச் சரியாக சொல்லி விட வேண்டும். அதை எப்படி படமாக்க போகிறேன். அந்தப் பாடலின் SITUATION என்ன? இது எல்லாவற்றையும் சொல்லிவிட்டால் பாடல் அப்படியே நம் கைக்கு கிடைத்து விடும். எனவே நான் அவரை சந்திக்கும்போது அதற்கு தேவையான அனைத்து விஷயங்களையும் தயார் செய்து விட்டு செல்வேன். ஆனால் ஏ.ஆர்.ரஹ்மானிடம் வரும்போது மொத்த கதையையும் சொல்லிவிட்டு பாடல்களுக்கான SITUATIONகளை திட்டமிடுவோம். அப்படி பேசி முடித்த பிறகு அவர் முதல் முதலில் ஒரு SCRATCH கொடுத்தார். அது அட்டகாசமாக இருந்தது. அதுவும் நான் SITUATION சொல்லாமலேயே அவர் செய்து இருந்தார். நான் அவரிடம் வெறும் கதையை மட்டும் தான் சொல்லியிருந்தேன். அப்போது தான் ரஹ்மான் அவர்களைப் பற்றிய உணர்ந்து கொண்டேன். இது முற்றிலும் மிகவும் அழகான ஒரு அனுபவம்." என இயக்குனர் மணிரத்தினம் தெரிவித்தார் இயக்குனர் மணிரத்னம் & ஏ.ஆர்.ரஹ்மான் கலந்து கொண்ட அந்த முழு பேட்டி இதோ