மலையாளத்தில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் மம்முட்டி.தனது வித்தியாசமான படங்களாலும்,விடாமுயற்சியாலும் மலையாள சினிமாவின் சூப்பர்ஸ்டாராக வளர்ந்து நிற்கிறார் மம்முட்டி.இன்றும் படங்களில் நடித்து ரசிகர்களை எண்டெர்டைன் செய்து வருகிறார்.

தற்போது இவர் நடிக்கும் புதிய படம் குறித்த தகவல் கிடைத்துள்ளது.Mammootty Kampany மற்றும் Wayfarer Films இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு காதல் - தி கோர் என பெயரிட்டுள்ளனர்.இந்த படத்தினை மலையாளத்தில் வெளியாகி சூப்பர்ஹிட் ஆன The Great Indian Kitchen படத்தினை இயக்கிய Jeo Baby இயக்கவுள்ளார்.

இந்த படத்தில் நடிகை ஜோதிகா ஹீரோயினாக நடிக்கவுள்ளார்.இவர் முதல் முறையாக மம்மூட்டியுடன் ஜோடி சேருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த படத்தின் அறிவிப்பு போஸ்ட்டரை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.

இதுகுறித்த அறிவிப்பு போஸ்டர் ஒன்றை படக்குழுவினர் இன்று ஜோதிகாவின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிட்டுள்ளனர்.இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்,நடிகைகள் குறித்த அறிவிப்பு மற்றும் ஷூட்டிங் தொடங்கும் நாள் குறித்த தகவல்கள் வெகு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Here’s unveiling the title of Mammootty Kampany's next project Directed by Jeo Baby

Kaathal - The Core | @kaathalthecore

Wishing a very happy birthday to Jyotika 😊@MKampanyOffl @DQsWayfarerFilm pic.twitter.com/dsnqD6FyW7

— Mammootty (@mammukka) October 18, 2022