தென்னிந்திய திரை உலகில் குறிப்பிடப்படும் சிறந்த தயாரிப்பாளர்களில் ஒருவரான கே.டி.குஞ்சுமோன் தனக்கென தனி ஸ்டைலில் பல பிரம்மாண்டமான திரைப்படங்களை வழங்கியவர். குறிப்பாக பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் முதல் படமான ஜென்டில்மேன் மற்றும் இரண்டாவது படமான காதலன் ஆகிய படங்களை கே.டி.குஞ்சுமோன் தயாரித்தார்.

ஆக்சன் கிங் அர்ஜுன் கதாநாயகனாக நடித்து வெளிவந்த ஜென்டில்மேன் திரைப்படம் மெகா ஹிட்டானது. ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் பாடல்களும் தனி கவனத்தை ஈர்த்தது. ஜென்டில்மேன் படத்தின் வெற்றியை தொடர்ந்து கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது ஜென்டில்மேன் 2 திரைப்படம் தயாராகவுள்ளதாக சில வாரங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியானது.

தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன் தயாரிக்கும் ஜென்டில்மேன் 2 திரைப்படத்தில் பிரம்மாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் உருவான பாகுபலி,RRR திரைப்படங்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் கீரவாணி ஜென்டில்மேன் 2 படத்திற்கு இசையமைப்பார் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் ஜென்டில்மேன் 2 திரைப்படத்தில் கதாநாயகியாக பிரபல மலையாள நடிகை நயன்தாரா சக்கரவர்த்தி நடித்ததாக அதிகாரப்பூர்வமாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி முக்கிய கதாபாத்திரங்களில் பல படங்களில் நடித்துள்ள நடிகை நயன்தாரா சக்கரவர்த்தி ஜென்டில்மேன் 2 திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இதர அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Happy to Introduce #NayantharaaChakravarthy as the lead actress in #Gentlemen2#ஜென்டில்மேன்2 #ജെന്റിൽമാൻ2#జెంటిల్మాన్2#ಜಂಟಲ್ಮನ್2@mmkeeravaani #GentlemanFilmInternational@ajay_64403 @johnsoncinepro @UrsVamsiShekar @Fridaymedia2

Another lead actress will be revealed soon pic.twitter.com/2MMkuCHF6N

— K.T.Kunjumon (@KT_Kunjumon) March 23, 2022