தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் மகேஷ்பாபு.மாஸ் ஹீரோவாக உருவெடுத்து தெலுங்கு சினிமாவின் சூப்பர்ஸ்டாராக அசத்தி வருகிறார் மகேஷ்பாபு.கடைசியாக இவர் நடிப்பில் Sarkaru Vaari Paata படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இதனை தொடர்ந்து மகேஷ்பாபு தனது 28ஆவது படத்தில் நடிக்கவுள்ளார்.SSMB28 என்று இந்த படத்திற்கு தற்காலிகமாக பெயரிட்டுள்ளனர்.இந்த படத்தினை த்ரிவிக்ரம் இயக்குகிறார்.மூன்றாவது முறையாக மகேஷ்பாபு த்ரிவிக்ரமுடன் இணைவதால் இந்த படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.

Haarika & Hassine Creations நிறுவனம் இந்த படத்தினை தயாரிக்கின்றனர்.தமன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.பூஜா ஹெக்டே இந்த படத்தின் ஹீரோயினாக நடிக்கிறார்.இந்த படத்தில் நடிக்கும் பிற நடிகர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது இந்த படத்தின் வேலைகளை தொடங்கியுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.படத்தின் ஷூட்டிங் ஆகஸ்ட் மாதம் தொடங்கும் என்றும் , படம் 2023 கோடை விடுமுறையாக வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளனர்.பக்க கமர்ஷியல் படமாக இந்த படம் அமையும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

The Evergreen Combo of Super Star @urstrulyMahesh & our Darling Director #Trivikram is back to REIGN! 🔥

The most eagerly awaited #SSMB28 pre-production has started on EPIC proportions! Shoot starts This Aug✨

Be Ready for a MASSive Blast at the Screens ~ Summer 2023! pic.twitter.com/m4g6m3p9Ad

— Haarika & Hassine Creations (@haarikahassine) July 9, 2022