தெலுங்கு சூப்பர்ஸ்டார் மகேஷ்பாபு நடிப்பில் பொங்கலுக்கு வெளியான திரைப்படம் Sarileru Neekevvaru.இந்த படத்தை Anil Ravipudi இயக்கியிருந்தார்.ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்த இந்த படம் வசூலிலும் சாதனை புரிந்தது.இதனை அடுத்து தனது 36ஆவது படத்தில் மஹரிஷி பட இயக்குனர் வம்சியுடன் இணைகிறார்.இந்த படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கவுள்ளது.

இதனை தொடர்ந்து இவர் கீதா கோவிந்தம் பட இயக்குனர் பரசுராம் உடன் Sarkaru Vaari Paata படத்தில் நடிக்கிறார்.இந்த படத்தை மகேஷ் பாபுவின் GMB ப்ரொடுக்ஷன்ஸ் மற்றும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் இணைந்து தயாரிக்கின்றனர்.தமன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

இந்த படத்தில் ஹீரோயினாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார் .இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் டீஸர் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இந்த படத்தின் ஷூட்டிங் படக்குழுவினருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் தாமதமானது.இந்த படம் மே 12ஆம் தேதி வெளியாகவுள்ளது.இந்த படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் செம ஹிட் அடித்து வருகிறது.

ஒரு பாடல் ஷூட்டிங்கை தவிர மற்ற ஷூட்டிங்குகள் நிறைவடைந்து விட்டது என்றும் அந்த பாடல் ஷூட்டிங் சில நாட்களுக்கு முன் தொடங்கப்பட்டது என்று படக்குழு தெரிவித்தனர்.தற்போது இந்த படத்தின் டைட்டில் பாடல் வரும் 23ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.இதன் ரிலீஸை எதிர்நோக்கி ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

#SVPTitleSong on April 23rd at 11:07 AM 💥

Eesaari speakers Pagilipovala 😎#SarkaruVaariPaata#SVPOnMay12

Super 🌟 @urstrulyMahesh @KeerthyOfficial @ParasuramPetla @madhie1 @MusicThaman @14ReelsPlus @GMBents @saregamasouth pic.twitter.com/kwA2x5UY4N

— Mythri Movie Makers (@MythriOfficial) April 20, 2022