தெலுங்கு சூப்பர்ஸ்டார் மகேஷ்பாபு நடிப்பில் பொங்கலுக்கு வெளியான திரைப்படம் Sarileru Neekevvaru.இந்த படத்தை Anil Ravipudi இயக்கியிருந்தார்.ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்த இந்த படம் வசூலிலும் சாதனை புரிந்தது.இதனை அடுத்து தனது 36ஆவது படத்தில் மஹரிஷி பட இயக்குனர் வம்சியுடன் இணைகிறார்.இந்த படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கவுள்ளது.

இதனை தொடர்ந்து இவர் கீதா கோவிந்தம் பட இயக்குனர் பரசுராம் உடன் Sarkaru Vaari Paata படத்தில் நடிக்கிறார்.இந்த படத்தை மகேஷ் பாபுவின் GMB ப்ரொடுக்ஷன்ஸ் மற்றும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் இணைந்து தயாரிக்கின்றனர்.தமன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

இந்த படத்தில் ஹீரோயினாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார் .இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் டீஸர் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது,விரைவில் இந்த படத்தின் பாடல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படம் ஏப்ரல் 1ஆம் தேதி வெளியாகும் என்ற அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த படத்தின் ஷூட்டிங் படக்குழுவினருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் தாமதமானது.தற்போது இந்த படத்தின் முதல் பாடல் வரும் பிப்ரவரி 14ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.காதலர் தினத்தன்று ரொமான்டிக் பாடலை படக்குழுவினர் வெளியிடவுள்ளதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

A longggg Wait In My Heart ❤️to Show My Love Gratitude & Respect on Our Dear #SuperStar @urstrulyMahesh gaaru 💕

Finally Arrives On this Big day 🤍

Love U brother 🖤 #SVPFirstSingle on #February14❣️#SarkaruVaariPaataMusic Starts 🎧🥁#SarkaruVaariPaata 🎵 pic.twitter.com/ZyeBWEw3yI

— thaman S (@MusicThaman) January 26, 2022