இளம் பெண்களை விருந்தாக்கி அரசு ஒப்பந்தங்கள் கையெழுத்து பெறப்பட்டு வருவதாகப் பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலத்தில் பாலியல் ஊழலில் ஈடுபட்டதாகக் கடந்த மாதம் 5 பெண்கள் உட்பட மொத்தம் 6 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட 5 பேரும், மத்தியப் பிரதேசத்தில் உள்ள முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் அரசு அதிகாரிகளுடன் பாலியல் உறவில் ஈடுபட்டு, அதை வீடியோவாக எடுத்து வைத்துக்கொண்டு, அதன் பிறகு அவர்களிடம் பணம் கேட்டு மிரட்டி வந்தனர்.

இதில், ஒரு அரசு பொறியாளர் அளித்த புகாரின் பேரில், விசாரணை நடத்திய போலீசார், அந்த பாலியல் மோசடி கும்பலை அதிரடியாகக் கைது செய்தனர். அதன்படி, அந்த கும்பல், இதேபோல் 5 ஆயிரம் பேரிடம் பாலியல் உறவில் ஈடுபட்டு, அதனை வீடியோவாக எடுத்துவைத்துக்கொண்டு, பிறகு பணம் கேட்டு மிரட்டியது, வெளிச்சத்திற்கு வந்தது. அதன்படி, ஆயிரம் பேரின் ஆபாச வீடியோக்கள், அந்த கும்பலாம் பணம் பெறப்பட்ட பிறகு அழிக்கப்பட்டதாகவும், மீதமிருந்த 4 ஆயிரம் ஆபாச வீடியோக்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தற்போது, இந்த வழக்கில் மேலும் சில அதிரடியான விசயங்கள் வெளிவந்துள்ளன. அதன்படி, பாலியல் மோசடி புகாரில் சிக்கியுள்ள நிறுவனத்திற்கு, கடந்தாண்டு அரசு ஒப்பந்தம் கிடைத்துள்ளது தெரியவந்துள்ளது. இந்த அரசு ஒப்பந்தத்தைப் பெறத் தடையாக இருந்த அனைத்து அதிகாரிகளுக்கும் இளம்பெண்கள் விருந்தாக்கப்பட்டுள்ளது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

மேலும், குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நிறுவனத்திடமிருந்து வேறு என்னென்ன ஒப்பந்தங்கள் பெறப்பட்டுள்ள என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, மத்தியப் பிரதேச மாநிலத்தில் கொடிகட்டிப் பறக்கும் பாலியல் ஊழல், அந்த மாநிலத்தையே அதிர வைத்துள்ளது.